அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

strength-of-the-legs-cross-leg-workout
குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அவர்கள் உடல் எடையை குறைக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வரலாம். ஆனால் குழந்தை பிறந்து 4 மாதம் ஆன பின்னர் தான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

சிசேரியன் அறுவைசிகிச்சை செய்திருந்தால் 6 மாதத்திற்கு பின்னர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே பயிற்சி செய்ய வேண்டும். பர்பீஸ் பயிற்சி விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. ஆரம்பத்தில் இந்த பயிற்சியை தான் முதலில் செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால் முட்டி தரையில் படாதபடி, பாதம் மற்றும் கை விரல்களைத் தரையில் ஊன்றியபடி இருக்கவும்.

இப்போது ஒரு கையால் உடலைத் தாங்கியடி, மற்றொரு கையை முன்னோக்கிக் கொண்டுசென்று தரையில் பதிக்கவும். பிறகு, மற்றொரு கையையும் முன்னே கொண்டுசென்று தரையில் ஊன்றவும். பிறகு, கால்களைப் பின்னே நீட்டவும். உடல் தரையில் படக் கூடாது.

ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு, பழைய நிலைக்குச் சென்று, மெதுவாக கால்விரல்கள் மற்றும் முன்னம் பாதங்களில் எழுந்து நின்று, கைகளை உயர்த்தி இறக்கவும். ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று செட்களாகப் பிரித்து, ஒவ்வொரு செட்டுக்கும் 10 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் போது சற்று கடினமாக இருக்கும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள்: உடல் எடையைக் குறைக்க உதவும். இதயத் துடிப்பு சீராக இருக்க உதவும். நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *