கால்களுக்கு வலிமை தரும் க்ராஸ் லெக் ரைஸ் பயிற்சி

strength-of-the-legs-cross-leg-workout
ஒரு சிலருக்கு கால், தொடை பகுதியில் அதிகளவு சதை இருக்கும். இதனால் நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். மேலும் கால் வலியும் அதிகளவு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் தரையில் மல்லாக்கப் படுத்து, கால்களை உயர்த்தி பாதங்களை ஒன்றன் பின் ஒன்றாக படத்தில் உள்ளபடி வைக்க வேண்டும். கைகளை தரையில் பக்கவாட்டில் பதித்துக்கொள்ள வேண்டும். இப்போது கால்களை செங்குத்தாக உயர்த்தி இறக்க வேண்டும். பின்னர் மற்றொரு பாதத்தை முன்னேவைத்துச் செய்ய வேண்டும்.
கால்களை மடக்கக்கூடாது. இந்த பயிற்சி செய்யும் போது கால் தொடைப்பகுதியில் வலி இருக்கும். அப்படி இருந்தால் நீங்கள் சரியான முறையில் பயிற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த பயிற்சியை தொடர்ந்து 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்து 1 மாதத்தில் கால் வலி படிப்படியாக குறைவதை காணலாம்

பலன்கள்: வயிற்றில் தேவையற்ற சதைகள் சேரவிடாமல் தடுக்கும். கால், தொடைப் பகுதிகளில் இருக்கும் சதைகள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *