முகவுரை

பாடிபில்டிங்கை பாமரர்களும் புரிந்து கொள்ளும்படி தமிழில் எழுதுவது மிகவும் கடினம் என்று நன்கு படித்தவர்களே சொல்வார்கள். என்னைக் கேட்டால் அதை விட கடினம் பாடிபில்டிங்கில் உள்ள பலவிதமான பயிற்சி முறைகளையும், நுணுக்கங்களையும், ரகசியங்களையும் தெளிவாக புரியும்படி விளக்கி எழுதுவதே.

உடற்பயிற்சி ஆர்வலர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், சந்தித்திருக்கிறேன். அவர்களில் பலருக்கு சரியான பயிற்சி முறைகளை தேர்ந்தெடுக்க தெரியாமலும், அதில் உள்ள நுணுக்கங்கள் புரியாமலும் சிரமப்படுகின்றனர். மேலும் எந்த தசைகளுக்கு எந்த பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று தெரியாமல் ஒரே தசைக்கு அதிக செட்களை பல மணி நேரம் செய்வார்கள். அது ஓவர் டிரைனிங் ஆகி இறுதியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தசை இழப்பில் போய் முடியும்.

இப்படி பலர் ஜிம்மிற்கு வந்த வேகத்திலேயே உடற்பயிற்சியில் ஆர்வம் இழந்து ஜிம்மிற்கு முற்றுப்புள்ளி வைப்பதை பார்த்திருக்கிறேன். மேலும் சிலர் டயட் இல்லாத கட்டுபாடற்ற உணவு பழக்கத்தை கையாள்வதால், உடலில் கொழுப்பு அதிகமாகி, உடற்பயிற்சி மீது ஆர்வம் குறைந்து ஜிம்மிற்கு செல்வதையே தவிர்க்கின்றனர்.

எனவே எனக்கு தெரிந்த பாடிபில்டிங் பற்றிய அனைத்து தகவல்களையும் எளிய தமிழில் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆர்வமே இதை தொடங்க காரணமாயிற்று.

நன்றி!

                                                                                                                      Tamil Body Building Team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *