உடலமைப்பிற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்க

விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள்…  இப்படி பல இடங்களில் ஆண், பெண் இருபாலரும் மிகவும் அதிகமாக, சிரமப்பட்டு உடலை வருத்தி உடற்பயிற்சி செய்வதைக் காணலாம். 92f9867d-4c78-453e-ab46-cc6349981e89_S_secvpf

குறிப்பாக இளம்பெண்கள் தம் உடலை மிக ஒல்லியாக, அழகாக மாற்றும் எண்ணத்தோடு,  உணவைக் குறைத்து, வாரம் 7 நாட்களும், தினம் 2 – 3 மணி நேரம் ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், நடைப்பயிற்சி, ஓட்டம், நீந்துதல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் என அனைத்தையும் ஒரே மூச்சில் செய்கிறார்கள். 

இளைஞர்களோ 6 பேக் / 8 பேக் என தம் வயிற்றில் அடுக்கடுக்கான தசைப்பிடிப்புக் கட்டுகளை உண்டாக்க பளு தூக்கும் கூடமான ஜிம்மில் நிரந்தரமாகக் குடியேறி விடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப, அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, வீட்டு, அலுவலக வேலைத்திறன், வயிறு, உடலில் உள்ள ஆரோக்கியக் குறைவு என அனைத்தையும் மனதில் கொண்டே உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

நல்ல பயிற்சியாளர்களிடம் அறிவுரை கேட்டு  செய்வது மிகவும் அவசியம். ஒரே நாளில் யாருமே அதிக உடற்பயிற்சி செய்வதால் சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுவிட முடியாது.

அதிகமாக உடலை வருத்துவதால் மூட்டுவலி, மயக்கம், வலிமைக் குறைவு, தசை வலிகள், தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகள் இணையும் அனைத்துப் பகுதிகளிலும் வேதனை என பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம்.

8 மாதம் கழித்து இயற்கை உணவு உலகத்தின் அடுத்த படைப்பாக முதுகுவலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கப்போகும் இந்தப்படைப்பை உங்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையான முதுகு வலிக்கு உடனடித் தீர்வு அளிக்க கூடிய வகையில் நம் சித்தர்கள் பாடல் ஒன்று அறியப்பெற்றோம். பாடல் படித்து முடித்த பின் முதுகு வலிக்கு இப்படி ஒரு பயிற்சியா என்று ஆச்சர்யம் தான் மேலிட்டது.

இந்தப்பயிற்சி செய்ய எந்த ஆசிரியரும் ஒரு தேவையில்லை, இதற்கு என்று தனியாக நேரம் எல்லாம் ஓதுக்க வேண்டாம் நாம் தூங்கும் போதே செய்யலாம். இவ்வளவு மணி நேரம் தான் செய்ய வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை. எந்த உபகரங்கணளும் தேவையில்லை. நாம் அறியப் பெற்ற பாடலை வைத்து படம் ஒன்று வரைந்தோம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. யாருக்காக இந்தப்பாடல் வருகிறது என்று பார்த்தால் அரசர்களுக்கும், அமைச்சர்களுக்கும் , கணக்கு வழக்கு பார்க்கும் நபர்களுக்கும் கூடவே உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்காகவும் இந்தப் பயிற்சியை செய்ய சொல்லியுள்ளனர்.

சோதனை முயற்சியாக முதுகு வலி உள்ள கணினியில் வேலை செய்யும் இரண்டு நபர்களிடம் இந்தப்பயிற்சியை கூறி அவர்களிடம் 9 நாட்கள் கழித்து இதனால் பயன் ஏதும் இருக்கிறாது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கூறினோம். கூடவே ஒரு கண்டிசனும் போட்டோம்  கண்டிப்பாக 9 நாட்களும் தினமும் தவறாது இந்தப் பயிற்சி செய்ய வேண்டும் என்று. அவர்களும் அப்படியே 9 நாட்களும் செய்திருக்கின்றனர். 9 நாட்கள் முடிந்த பின் இரண்டு பேரும் நம்மிடம் தனித்தனியாக தொடர்பு கொண்டு முதுகுவலி சுத்தமாக இல்லை என்றும், சிறிய அளவு வலி கூட இப்போது முதுகில் இல்லை என்றும் கூறினர். விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும், முதுகுவலி உள்ள நபர்கள் இமெயில் மூலம் இந்தப்பயிற்சி எப்படி செய்வது என்று கேட்டால் அவர்களுக்கு இமெயில் மூலம் பதில் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோள்பட்டை வலியை போக்கும் டம்ப்பெல்ஸ் பயிற்சி

இன்றைய தலைமுறையினரை அதிகளவில் பாதிப்பது தோள்பட்டை, முதுகு வலி பிரச்சனை. இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம், ஜிம்முக்கு சென்றும் செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளவும். 40f3b41d-1a39-4859-80bf-e64b4a17ebc9_S_secvpf

பின்னர் டம்ப்பெல்சை இரு கைகளிலும் பிடித்து கொள்ளவும். இடுப்பு வரை முன்னால் குனிந்தபடி டம்ப்பெல்சை தோள்பட்டை வரை தூக்கவும். பின் கீழே இறக்க வேண்டும். கைகள் நேராக இருக்க வேண்டும். வளைக்க கூடாது.   

இவ்வாறு ஆரம்பத்தில் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறையும் அதற்கு மேலும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை நின்று கொண்டும் செய்யலாம். நின்ற நிலையில் இடுப்பு வரை முன்னால் குனிந்தபடி செய்ய வேண்டும். 

ஆரம்பத்தில் குறைந்த எடையுள்ள டம்ப்பெல்சை உபயோகிக்க வேண்டும். முதுகு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயாளிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.4867

 பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

 இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

 உடற்பயிற்சியின் பயன்கள்.

 இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.

 அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.

இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.

ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும். நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது. இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதய நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன. –

முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம்.

8 மாதம் கழித்து இயற்கை உணவு உலகத்தின் அடுத்த படைப்பாக முதுகுவலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கப்போகும் இந்தப்படைப்பை உங்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையான முதுகு வலிக்கு உடனடித் தீர்வு அளிக்க கூடிய வகையில் நம் சித்தர்கள் பாடல் ஒன்று அறியப்பெற்றோம். பாடல் படித்து முடித்த பின் முதுகு வலிக்கு இப்படி ஒரு பயிற்சியா என்று ஆச்சர்யம் தான் மேலிட்டது.

இந்தப்பயிற்சி செய்ய எந்த ஆசிரியரும் ஒரு தேவையில்லை, இதற்கு என்று தனியாக நேரம் எல்லாம் ஓதுக்க வேண்டாம் நாம் தூங்கும் போதே செய்யலாம். இவ்வளவு மணி நேரம் தான் செய்ய வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை. எந்த உபகரங்கணளும் தேவையில்லை. நாம் அறியப் பெற்ற பாடலை வைத்து படம் ஒன்று வரைந்தோம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. யாருக்காக இந்தப்பாடல் வருகிறது என்று பார்த்தால் அரசர்களுக்கும், அமைச்சர்களுக்கும் , கணக்கு வழக்கு பார்க்கும் நபர்களுக்கும் கூடவே உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்காகவும் இந்தப் பயிற்சியை செய்ய சொல்லியுள்ளனர்.

சோதனை முயற்சியாக முதுகு வலி உள்ள கணினியில் வேலை செய்யும் இரண்டு நபர்களிடம் இந்தப்பயிற்சியை கூறி அவர்களிடம் 9 நாட்கள் கழித்து இதனால் பயன் ஏதும் இருக்கிறாது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கூறினோம். கூடவே ஒரு கண்டிசனும் போட்டோம்  கண்டிப்பாக 9 நாட்களும் தினமும் தவறாது இந்தப் பயிற்சி செய்ய வேண்டும் என்று. அவர்களும் அப்படியே 9 நாட்களும் செய்திருக்கின்றனர். 9 நாட்கள் முடிந்த பின் இரண்டு பேரும் நம்மிடம் தனித்தனியாக தொடர்பு கொண்டு முதுகுவலி சுத்தமாக இல்லை என்றும், சிறிய அளவு வலி கூட இப்போது முதுகில் இல்லை என்றும் கூறினர். விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும், முதுகுவலி உள்ள நபர்கள் இமெயில் மூலம் இந்தப்பயிற்சி எப்படி செய்வது என்று கேட்டால் அவர்களுக்கு இமெயில் மூலம் பதில் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொப்பை குறைய உதவும் கயிறு பயிற்சி

இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிமையாக பயிற்சியாகும். இந்த பயிற்சி செய்ய உடற்பயிற்சி பேண்ட் மட்டும் இருந்தால் போதுமானது. பயிற்சி செய்ய விரிப்பில் மல்லாந்து படுக்கவும். உடற்பயிற்சி பேண்ட்டை இடது காலின் பாதத்தில் (படம் Aயில் உள்ளபடி) மாட்டி ஒரு பக்கத்தை இடது கையால் பிடித்து கொள்ளவும். e28da296-97e9-45b2-b400-fc68269c563d_S_secvpf

மற்றொரு முனையை வலது கையால் வயிற்றின் அருகில் பிடித்து கொள்ளவும். இப்போது உடற்பயிற்சி பேண்ட் ‘ V’ போன்ற வடிவத்தில் இருக்கும். வலது காலை முட்டி வரை மடக்கி வைக்கவும். இப்போது வயிற்று பக்கம் உள்ள வலது கையை அசைக்காமல் உடற்பயிற்சி பேண்ட்டை பிடித்துள்ள இடது காலை மெதுவாக படம் Bயில் உள்ளபடி இடுப்புக்கு நேராக நீட்டவும். 

காலை மடக்க கூடாது. சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் இடது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் கால்களை மாற்றி வலது காலுக்கும் செய்ய வேண்டும். கால்களை நீட்டும் போது நேராக வருவதற்கு உடற்பயிற்சி பேண்ட்டை சரிசெய்து கொள்ளலாம்.. 

ஆரம்பத்தில் 20 முறையும் அதன் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறையும், அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சி தொப்பை குறைவதற்கும், கால்களுக்கு வலிமையும் தரக்கூடியதாகும்..

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில நடைமுறைகள்

ஆரோக்கியம் என்னும் சொத்து எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்றால், மிதமான உணவோடு உடற்பயிற்சியும் அவசியம். பொதுவாக குடும்பத்தில் ஒருவர் மட்டும் தனியாக நடைப்பயிற்சி செல்வதோ, மாடியில் உடற்பயிற்சி செய்வதோ உற்சாகத்தை அளிக்காது. ae49360e-55fa-4759-a9d9-133adefafbf4_S_secvpf

எனவே, குடும்ப உறுப்பினர்களையும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தால், நடைப்பயிற்சி கூட உற்சாகமாக இருக்கும். நடந்து செல்ல முடியாத தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது சைக்கிளில் செல்வது சிறந்த உடற்பயிற்சியாக அமையும். 

அலுவலகங்களில் உள்ள லிப்ட்டுகளைப் பயன்படுத்தாமல், ஒரு வேளையாவது படிகட்டுகளைப் பயன்படுத்தினால் வயிற்றில் விழும் அதிகப்படியான சதைப்பிடிப்பைக் குறைக்கலாம். 

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்காமல் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் உடற்பயிற்சி உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிக உடல் எடை உடையவர்கள், உங்களது எடையில் எவ்வளவை குறைக்க விரும்புகிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொண்டு அதை நோக்கி உங்கள் உடற்பயிற்சியை முறைப்படுத்துங்கள். 

தொடர்ந்து 30 நிமிட நடைப்பயிற்சிதான் முழுமையான நடைப்பயிற்சியாக இருக்கும். அதற்குக் குறைவான நடைப்பயிற்சியால் உடலுக்கு எந்த பயனும் ஏற்படாது. உடற்பயிற்சி என்று தனியாக செய்ய விரும்பாதவர்கள், சைக்கிளிங், விளையாட்டு, நடனம் என்று தங்களை வேறு வகைகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். 

நோய் இல்லா மனிதனாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யுங்கள்.

டயமண்ட் புஷ் அப்

இந்த பயிற்சி புஷ் அப் செய்வதை போல் தான் செய்ய வேண்டும். புஷ் அப் பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் புஷ் அப் செய்ய போது இருக்கும் நிலையில் இருக்கவும். 4d667600-300c-4e74-8996-a1e0c7c0d6ea_S_secvpf

ஆனால் கைகளை நேராக வைக்காமல் படத்தில் உள்ளபடி கைகள் இரண்டும் ஒன்றைஒன்று பார்த்தபடி வைக்க வேண்டும். இந்த நிலையில் முன்னால் குனிந்து நிமிர வேண்டும். முடிந்த அளவு முன்னால் குனிந்தால் போதுமானது. ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய சற்று கடினமாக இருக்கும். 

ஆனால் கைகளுக்கு இந்த பயிற்சி நல்ல வலிமையைத்தரக்கூடியது. ஆரம்பத்தில் 20 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை 40 முறையும் அல்லது அதற்கு மேலும் செய்யலாம். எவ்வளவு அதிகமாக செய்கிறோமோ அவ்வளவு பலன் விரைவில் கிடைக்கும்.

மாரடைப்பை தடுக்கும் ஜாக்கிங்

தற்போது பலரும் ஜாக்கிங் எனப்படும் மெல்லோட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். ad16974f-f58a-4b23-b972-d49f29c34a5c_S_secvpf

உடலுக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி மாரடைப்பை தடுக்க உதவியாக இருக்கிறது. பெரும்பான்மையான மருத்துவர்கள் கூடத் தங்களை மாரடைப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கின்றனர். மெல்லேட்டத்தின் பயன்கள் 

* நமது இதயம் சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு, சாதாரண நிலையை விட மெல்லோட்டத்தின் போது அதிகமாகிறது. 

* ரத்தக்குழாய்களையும், ரத்த குழாய்களை சுற்றியுள்ள அமைப்புகளையும் மெல்லோட்டம் வலுவடையச்செய்கிறது. 

* ரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களை இது தடுக்கிறது. 

* அதிகரித்த ரத்த அழுத்த நிலையை குறைக்க துணைபுரிகிறது. 

* மெல்லோட்டத்தினால் இதயத்தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகமாவதால் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றது. 

* ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது. 

* மெல்லோட்டத்தினால் உடம்பின் கீழ்ப்பாகம், குறிப்பாக கால்கள் வலுவடைகின்றன. தொப்பை கரையும். 

* பெரும்பாலும் காலை வேளையில் மெல்லோட்டத்தில் ஈடுபடுவதால் சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தூய காற்றை சுவாசிப்பது, மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும். 

* வேகமான நடையைவிட மெல்லோட்டம் அதிக பயன்கள் அளிப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே சோம்பல்படாமல், அதிகாலையில் எழுந்து மெல்லோட்டத்தில் ஈடுபட ஆரம்பியுங்கள்.

எடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்

எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம்.  பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. 9fb7cc56-c621-4f12-8041-48864803f2d6_S_secvpf

தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். 

• ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும். 

• நீங்கள் நினைப்பதை விட, இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகள் காலப்போக்கில் அதிக தீமையை விளைவிக்கலாம். இது தசைகளை வேகமாக வளர்க்க உதவினாலும், தசைகளில் புண்களை ஏற்படுத்தும். 

• தசைகளை வளர்க்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, கார்டியோ உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வது உங்கள் இலட்சியத்தை அடைய விடாது. அளவுக்கு அதிகமான கார்டியோ உடற்பயிற்சிகள் எடை தூக்கும் பயிற்சியில் நன்மைகளுக்கு முட்டுக் கட்டையாக விளங்கும். ஒரே நேரத்தில் கொழுப்பையும் எரித்து, தசைகளையும் வளர்க்க முடியாது. இருப்பினும் கார்டியோ உடற்பயிற்சிகளால், உங்கள் தசைகளை தான் வார்ம் அப் செய்கிறீர்கள். இதனால் சற்று கொழுப்பும் குறைகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசைகளை திறம்பட செயல்பட வைக்கும். 

• பலன் பெறுவதை துரிதப்படுத்த இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஸ்டீராய்டுகளால் ஏற்படும் தீமைகள் பல – டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும், சீக்கிரமே வயசானவர் போன்று காணப்படுவீர்கள், ஆண்களுக்கு மார்பகங்கள் உண்டாகும். 

• பளு தூக்கும் போது தவறி போட்டு ஒவ்வொரு வருடமும் சிலர் இறக்கின்றனர். பெஞ்ச் ப்ரெஸ் செய்யும் போது பிறரின் உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும். மேலும் ஆரம்ப கட்ட பயிற்சியின் போது அதிக எடை உள்ள பளுவை தூக்காதீர்கள்.