Archive for January, 2015

வயதானவர்கள் மெதுவாக உடற்பயிற்சி செய்யுங்க

* உடற்பயிற்சியை ஒரேநேரத்தில் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இடைவெளி எடுத்துக்கொண்டு 2, 3 முறையாகச் செய்யலாம். காலை, மாலை என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்யலாம். பொதுவாக, காலையில் சூரிய ஒளிக்கதிர் படும்போது உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. எலும்புகள் நன்கு வலுபெறும்.

* பக்கவாதம், மூட்டு வலி, முடக்குவாதம், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், சேரில் அமர்ந்தபடியே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாம். உட்கார்ந்த நிலையில் தியானம் செய்வதும் ஒருவித உடற்பயிற்சிதான். மனசும் லேசாகும்.

* மிகவும் மெதுவாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆர்வக் கோளாறில், வேகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், வலியுடன் சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

* சாப்பிடாமல் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. இதனால், தலைச்சுற்றல், மயக்கம், பலவீனம் ஏற்படும். உணவு உட்கொண்ட அரை மணி நேரம் கழித்து பயிற்சியில் ஈடுபடலாம். காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள், கஞ்சி குடித்துவிட்டு செய்வது நல்லது.

* துணிகளை உலர்த்துவது, மடித்துவைப்பது, தட்டுகளைக் கழுவுவது, மெதுவாகப் பெருக்குவது என வீட்டிலேயே சில எளிய வேலைகளைச் செய்வதும்கூட நல்ல பயிற்சிகள்தான்.

* கால்கள் அடிக்கடி மறத்துப் போகலாம். உட்கார்ந்த நிலையில் கால்களை அசைத்தும், அடிக்கடி எழுந்து சற்று நடப்பதும் நல்லது. அரைமணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

* இதய பலவீனம் உள்ளவர்கள், மற்றவர்களின் உதவியோடு இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முதன்முதலில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள், மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு உடற்பயிற்சியைத் தொடங்குவது நல்லது. hhhhhhhhhhh

வாரத்துக்கு 3 மணிநேரம் நடந்தால் மாரடைப்பை தடுக்கலாம்

உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு, உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். நிம்மதியான தூக்கம் வரும். எந்த பக்கவிளைவும் இல்லாதது.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. எனவே, உடற்பயிற்சியின் மூலம் உற்சாக வாழ்வை வாழலாம்.” வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் 40 சதவிகிதமும், ஐந்து மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது, 50 சதவிகிதமும் ஏற்படுகிறது என்கிறது ஓர் ஆராய்ச்சி.

மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது, மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும். உடல் ரீதியான பிரச்சனைகள், நோய்கள், சுற்றுச்சூழலை மனதில் கொண்டு பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

a34f762b-2139-494e-b6b6-4046ff75e735_S_secvpfநல்ல ஆரோக்கியம் உள்ளவர்கள், நடப்பது, ஓடுவது, சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளை 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். வசதிப் படைத்தவர்கள், டிரெட் மில்-ல் 15 நிமிடங்கள் பயிற்சி எடுக்கலாம். டிரெட்மில் இல்லாதவர்கள், மேடு பள்ளம் இல்லாத சமமான பாதையில் வீட்டைச் சுற்றியே தினமும் ஐந்து கிலோ மீட்டர் வரை நடக்கலாம்.

நடக்க முடியாதவர்கள், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக், வாக்கர் எடுத்துக்கொண்டு நடக்கலாம். இதனால், உடல் பருமன் குறையும். மாரடைப்பு வராமல் தடுக்கும். எலும்பு வலுபெறும். நல்லத் தூக்கம் வரும். ரத்த அழுத்தம் குறையும். தசைகள் உறுதிபடும்.

முதுமைக் காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலமே பல்வேறு நோய்களை அருகே நெருங்கவிடாமல் செய்யலாம்.

உடற்பயிற்சிக்கு பின் செய்யும் தவறுகள்

தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயிற்சி செய்வதே வீணாகிவிடும்.

உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப்படும். அத்தகைய ஓய்வு கிடைக்காமல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

3168cb21-6430-4bbb-bd5c-f8e048bccfe6_S_secvpfஎனவே உடற்பயிற்சி செய்த பின்னர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்ற ஆரம்பியுங்கள். இங்கு உடற்பயிற்சிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டியவைகளை பார்க்கலாம்..

• உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கடுமையான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இதனால் தீவிரமான பிரச்சனை ஏதும் நேராமல் தடுக்கும்.

• ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர்த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப் புகுந்திருக்கும். அத்தகைய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தவறாமல் உடற்பயிற்சிக்கு பின், உடைகளை மாற்றுவதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.

உடையை மாற்றி துவைத்த பின்னர், குளித்துவிட வேண்டும். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடுவது நல்லது.

• உடற்பயிற்சிக்கு பின் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடற்பயிற்சியின் போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.

தொடை, கால் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் பயிற்சி

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது.

உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உடற்பயிற்சிகள் சில நேரங்களில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். இப்போது தொடைப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சி முறைகளை பார்க்கலாம்..

* பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கை கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும்.

இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும். பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும். இதுபோல் மாறி மாறி 15 முறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

* 482a4b29-a8cc-4e8b-8472-484ff8161b91_S_secvpfஇப்பொழுது அதே நிலையில் நின்றவாறு, வலது பக்க இடுப்பை எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கித் தள்ளவும். அதே நிலையில் இருந்தவாறு, இடுப்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுழற்றவும்.

சுற்றி முடித்தவுடன், மறுபடியும் நேராக நின்று கொள்ளவும். இப்பொழுது இடது பக்க இடுப்பை அதே போல் முன்னோக்கித் தள்ள வேண்டும். பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும், இடமிருந்து வலமாக 30 வினாடிகளும் மாறி மாறி சுழற்றவும். முடித்தவுடன் மறுபடியும் நேரான நிலைக்கு வந்துவிடவும்.

மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் உடற்பயிற்சி

ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள்.

இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும். தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான்.

7255ec93-dc0e-454d-bd77-288de6a0040c_S_secvpfஉங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும். வியர்த்தால்தான் கொழுப்பு குறையும், ஃபேன், ஏ.சி எல்லாம் வேணாம்ப்பா’ என சிலர் வியர்க்க வியர்க்கப் பயிற்சிகளைச் செய்வார்கள்.

அது தவறு. பயிற்சிகளை மேற்கொள்ளும் இடம் நல்ல காற்றோட்ட வசதியுடன்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் பிடரிப் பகுதியில் வியர்வை சேராமல் ஒரு துணிகொண்டு அடிக்கடி துடைத்துக்கொள்வது நல்லது. பயிற்சிகள் செய்யும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என சிலர் நினைப்பார்கள்.

அது தவறு. பயிற்சிகள் செய்யும்போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதைச் சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். குளிர்ந்த நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

தொடை பகுதியை வலுவடையச் செய்யும் ஸ்குவாட்ஸ் பயிற்சி

பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)என்ற எடை தூக்கும் கருவி தேவை. பார்பெல் பிடியை பின்தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்தநிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள்இழுத்து கீழே உட்காருவது போன்ற நிலைக்குக் கால்முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும்.

79a67ce3-06f6-4bfa-bd08-b05e26df99f7_S_secvpfசில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.

தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

டென்ஷனை குறைக்கும் உடற்பயிற்சிகள்

சில எளிய பயிற்சிகளின் மூலம் நாம் இதை சாதிக்கலாம். உடற்பயிற்சி என்றாலே, பல பெரிய உடற்பயிற்சி சாதனங்கள் உடைய “ஜிம்” சென்று கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை.

இதற்கு அதிக நேரமும், உழைப்பும் தேவை. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வது பலருக்கு சிரமமாகவும், எரிச்சலாகவும், நேரமின்றியும் இருக்கும். எனவே எளிமையான மற்றும் சிறந்த பயிற்சிகளே அனைவருக்கும் ஏற்றது. ஓடுதல், நீச்சலடித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை எளிமையான சிறந்த பயிற்சிகள்.

மேலும், மரங்கள் அடங்கிய திறந்த வெளியில் பயிற்சியில் ஈடுபடுவது சிறப்பான பலனைத் தரும். இதன்மூலம் உங்களுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும். மேலும் இசையுடன் சேர்ந்து பயிற்சி செய்து பழகலாம். இதன்மூலம் பயிற்சி செய்வது நமக்கு சிரமமான ஒன்றாகவே தெரியாது.

நமது ஆர்வமும் அதிகரிக்கும். இதைத்தவிர, வலது-இடது மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மூளை பயிற்சியிலும் ஈடுபடலாம். பயிற்சியானது, உங்களின் டென்சனை குறைத்து ரிலாக்சாக வைத்திருக்கிறது. உடற்பயிற்சியின் மூலம் உங்களின் உற்சாகம் அதிகரிக்கிறது.
hh

இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்வது முக்கியம். இதன்மூலம் நீங்கள் அதிக பலன் பெற்று, அந்த பயிற்சிகளுக்கு உங்களை அறியாமல் அடிமையாகி விடுவீர்கள்.

ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் எளிதாக செய்ய முடியும். மேலும் கற்பழிப்பு, கடத்தல் போன்ற எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்தும் உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள முடியும்.

நவீன ஜிம்களில் இதயத் தசைகளுக்குத் தேவையான உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்பு யுக்திகள் கற்றுத் தரப்படுகின்றன. அவைகளை முழுமையாக கற்றுக்கொள்ள அகன்ற பரப்புடன் கூடிய வசதியான உடற்பயிற்சிக் கூடத்தை தேர்ந்தெடுங்கள். அங்கு குத்துச்சண்டைக்குப் பயன்படுத்தும் பேடுகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை வசதியாக உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து முனைப்புடன் செய்யும் வழிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் போன்றவை பற்றியும் அவர்கள் கற்றுத்தர வேண்டும்.

ffஉடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், எலும்பு, மூட்டு இணைப்புகள் ஆகியவற்றைப் பராமரிக்கும் விதம் மற்றும் முதுகு வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள் போன்றவை முறையாக கற்றுத்தரப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் பயிற்சி பெறுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 700 கலோரிக்கான சக்தியை செலவிடுகின்றனர். முதலில் குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கும் பயிற்சியாளர்கள், நாளடைவில் பயிற்சியின் மேல் உள்ள ஆர்வத்தில், படிப்படியாக அதிகளவு நேரத்தை ஒதுக்குகிறார்கள். முறையாக செய்யப்படும் உடற்பயிற்சியே பெண்களுக்கு தேவையான முழு ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும்.

பெண்களுக்கான முத்தான 3 உடற்பயிற்சி

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்.

செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும். ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்களை பெற முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!

8fb24848-67d0-45f0-91e2-60b6a5c3f2e0_S_secvpf

பயிற்சி 1 ஓரடி அகலம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 2 முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 3 முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும். ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.