Archive for August, 2016

எளிய உடற்பயிற்சிகள்

நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, சக்தியோ அல்லது வசதியோ இருப்பதில்லை. “வயதாவதன் விளைவுகளை தவிர்க்கவும் மற்றும் உடல் தசைகளில் காயம் ஏற்படாமல் தவிர்க்கவும், உடலை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் தேவை”. 

man-doing-barbell-rowing-workoutஉறுதியான தசைகளானவை சுமைகளை நீங்களாகவே சுமந்து செல்லவும், நாற்காலிகளிலிருந்து எளிதில் எழுந்திருக்கவும் மற்றும் நீண்ட தூரம் வேகமாக நடக்கவும் உதவுபவையாகும். உடற்பயிற்சிகள் உறுதியான தசைகள், மூட்டுகள் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவியாகவும், எலும்பு புரை நோயை குறைக்கவும் மற்றும் உட்காரும் நிலையை மேம்படுத்தி முதுகு வலியை குறைக்கவும் செய்யும். 

அதிலும் அதிகமான தசையை கொண்டிருக்கும் வயதானவர்களுக்கு, இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். உடல் உறுதியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை சிகிச்சை மையத்தில் தொடர்ந்து செய்ததன் மூலமாக, வாக்கர்களை பயன்படுத்தி நடந்து வந்த 80 மற்றும் 90 வயதான பெரியவர்கள் பலரும், 

பத்தே வாரங்களில் இப்பொழுது வெறும் குச்சிகளைப் பிடித்துக் கொண்டே நடக்கிறார்கள் என்று, அண்மையில் நடந்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சில எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வருவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமான வைத்துக்கொள்ள முடியும். 

ll* வயிற்றை நெருக்குதல் (Abdominal Crunch) : 

நாற்காலியின் விளிம்பில் நேராக அமரவும். கைகள் இரண்டையும் மார்பை நோக்கி குறுக்காக வைத்துக் கொண்டு, தோள்பட்டைகள் இரண்டும் நாற்காலியின் பின்பகுதியை தொடும் வரையிலும் பின்னால் சாயத் தொடங்கவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருக்கவும் (இதனை செய்யும் போது சரியான இடைவெளிகளில் சுவாசிக்க வேண்டும்). பின்னர் துவக்க நிலைக்கு மெதுவாக வரவும். 

 

calf-raise* கெண்டைக்கால் உயர்த்துதல் (Calf raises) : 

சற்றே உயரமான தளத்தில் (படிக்கட்டின் கீழேயுள்ள கடைசி படியை பயன்படுத்தலாம்) உங்கள் பாதம் மட்டும் படியில் இருக்குமாறும், பாதத்தின் குதிகால் பகுதி அடித்தளம் இல்லாமல், தரை தளத்திற்கு இணையாகவும் இருக்கும் வகையில் நிற்கவும். உடலின் மேல் பகுதியை சரியாக நிமிர்த்தி நிறுத்துவதன் மூலம், குதிகாலை உயர்த்தவும் மற்றும் கால் விரலின் நுனியில் நிற்கவும் முடியும். இதற்காக நீங்கள் ஒரு நாற்காலியையோ அல்லது சுவற்றையோ கூட பயன்படுத்த வேண்டியிருக்கும். இறுதியில், மெதுவாக பாதங்கள் பழைய நிலையை அடையுமாறு நிறுத்தவும்.

இடுப்பு சதையை குறைய செய்யும் லெக் லிப்டிங் பயிற்சி

criss-cross-crunchesஇந்த பயிற்சி பொதுவாக பெண்களுக்கு ஏற்ற பயிற்சியாகும். வீட்டில் இருக்கும் பெண்கள் உணவு பொருட்கள் வீணாக கூடாது என்று அனைத்தையும் சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்து கொள்கின்றனர். இவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அவர்களுக்கு பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை.

இப்படிப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சி ஒன்று உள்ளது. அது தான் லெக் லிப்டிங் பயிற்சி. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாள்களில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். 

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். பின்னர் கால்களை 90 டிகிரியில்  மேலே தூக்கவும். பின்னர் கைககளை தரையில் ஊன்றியபடி கால்களை இன்னும் மேலே தூக்கவும். 

இப்போது உங்கள் எடை முழுவதும் கைகளில் தாங்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 விநாடிகள் இருந்த பின்னர் மீண்டும் 90 டிகிரியில் கால்களை கொண்டு வரவும். பின்னர் திரும்பவும் கால்களை தூக்கவும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 25 முறை செய்யவும்.

மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சிகள்

மார்புத்தசையை வலுவாக்கும் பயிற்சி இது.

chest-muscle-will-strengthening-exercises
மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சிகள்
மார்புத்தசையை வலுவாக்க இந்த 2 பயிற்சிகளும் சிறந்தவை. இப்போது இந்த பயிற்சிகளை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பார்பெல் கர்ல் (barbell curls)

தோள்பட்டை அகலத்துக்குக் பார்பெல்லை தொடைகளுக்கு அருகில் பிடிக்க வேண்டும். முன்பக்கம் தூக்கும் வகையில் இந்தப் பிடிப்பு இருக்க வேண்டும். உங்கள் கைமுட்டி மடங்கக் கூடாது. மூச்சை உள்ளிழுத்தபடி முட்டியை மடித்து பார்பெல்லை மார்பு வரை உயர்த்த வேண்டும். பார்பெல் மார்பை நெருங்கியதும் உங்கள் பைசெப்ஸை நன்றாக இறுகவைத்து மூச்சை வெளியேவிட்டபடி, மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பைசெப்ஸ் தசைகளை நன்றாக உறுதிப்படுத்தும்.

பெக் டெக் ஃபிளைஸ் (pec deck flyes)

இதற்கென உள்ள பிரத்யேகக் கருவியில் நேராக அமரவேண்டும். அதன் கைப்பிடிகளை பிடித்துக்கொண்டு, தோள்பட்டையை நேராக வைக்க வேண்டும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடி, கைப்பிடியை மெதுவாகப் பக்கவாட்டில் தள்ளிக் கொண்டுசென்று தோள்பட்டைக்கு நேராகக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும். இதுவும் மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சி.

இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் 3 பயிற்சிகள்

சில பெண்களுக்கு இடுப்பு, வயிற்று பகுதிகளிலில் அதிகளவு சதை இருக்கும். இந்த இடுப்பு சதையை குறைக்க இந்த 3 பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

hip-fat-reduce-in-the-3-exercises

இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் 3 பயிற்சிகள்
ஆல்ட்டர்நேட் லங்கீஸ் (Alternate lunges)

விரிப்பின் மீது நேராக நின்று, நடப்பது போல் ஒரு காலை முன் பக்கமாகவும், மற்றொரு காலை பின் பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, முன் பக்கக் காலை மடித்து நிற்பதுபோல வைத்துக்கொண்டு, பின் பக்க கால் முட்டியைத் தரையை நோக்கிக் கொண்டுவர வேண்டும். ஆனால், கால் முட்டி தரையில் படக் கூடாது. பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள்: முன் பக்கத் தொடை மற்றும் பின் பக்கம். இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். தசைகளை வலுப்படுத்தி, உறுதியாக்கும்.

சைடு பிளாங்க் (Side plank)

இடது கை, காலால் உடலைத் தாங்கும்படி ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையை செங்குத்தாக உயத்தி 10 முதல் 15 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும்.
பலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள ஆழமான கோர் தசைகள் உறுதியாகும்.

ரிவர்ஸ் கர்ல் அப்ஸ் (Reverse curl ups)

சமதளத்தில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். கைகளை மடித்து, இடுப்புப்பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, கால்களை செங்குத்தாக உயர்த்தி இறக்க வேண்டும்.
பலன்கள்: மேல் மற்றும் கீழ் வயிறுத் தசைகளை உறுதிப்படுத்தும்.

இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் சைக்கிளிங் பயிற்சி

தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும்.
men-and-women-cycling-in-gym-bike
இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் சைக்கிளிங் பயிற்சி
தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி செய்கிறவர்களுக்கு 40 சதவிகிதம் நீரிழிவு குறைந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்புப் பிரச்சனைகள், மூட்டு வலி, முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் பரிந்துரைக்கப்படுகிற பயிற்சியாக இருக்கிறது. பருமன் உள்ளவர்களால் அதிக எடையை தூக்க முடியாது என்பதால் இவர்களுக்கு சைக்கிளிங் நல்ல சாய்ஸாக இருக்கும்.

நடைப்பயிற்சியில் 150 முதல் 250 கலோரி வரைதான் எரிக்க முடியும். ஜாக்கிங் செல்லும்போது 300 முதல் 400 வரைதான் கலோரிகள் செலவாகும். சைக்கிளிங்கிலோ 500 முதல் 600 வரை கலோரிகளை எரிக்க முடியும். தினமும் 30 நிமிடம் சைக்கிளிங் பயிற்சி செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, வருடத்தில்

தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும். இதயத்துடிப்பின் விகிதத்தையும் சராசரி அளவுக்கு மிதமாகக் கொண்டு வர முடியும். இதற்காகவே, ஒருவருக்கு சைக்கிளிங் பயிற்சி கொடுக்கும் முன்னர் அவரது இதயத்துடிப்பைக் கணித்துக்கொண்டு அந்த வேகத்துக்குத் தகுந்தாற்போல சைக்கிளிங் பயிற்சி கொடுப்பார்கள். சைக்கிளிங் பயிற்சியை பலருடன் இணைந்து மேற்கொள்வது இன்னும் நல்ல பலனைத் தரும்.

ஜிம்மில் செய்யும் சைக்கிளிங்கிலேயே இதுபோல் கூட்டாக 10 பேர் சேர்ந்து சைக்கிளிங் செய்யும் ஸ்பின்னிங் முறை இருக்கிறது. இந்த ஸ்பின்னிங் முறையின்போது துள்ளலான இசை ஒலித்துக் கொண்டிருக்கும்.

இன்ஸ்ட்ரக்டர் ஒருவர் சொல்லிக் கொடுப்பார். மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ, ஒரு குகைக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ கற்பனை செய்துகொள்ள வேண்டும். இதுதான் ஸ்பின்னிங் சைக்கிளிங் முறை. இது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும். மனதிலும் உற்சாகம் பெருகும். இதனால் மன அழுத்தம், பதற்றம் போன்றவை நம்மைவிட்டுக் காணாமல் போய்விடும்.

சைக்கிளிங்கில் Aerobic என்ற ஆக்சிஜன் பயிற்சி, Anaerobic என்ற ஆக்சிஜன் இல்லாமல் செய்யும் பயிற்சி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் ஏரோபிக் முறை எளிதானது. இரண்டாவது வகை அனரோபிக் பயிற்சியில் கொஞ்சம் சிரமப்பட்டு, அதிவேகமாக, மூச்சிரைக்கப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏரோபிக் பயிற்சியில் நம் உடலில் இருக்கும் கிளைக்கோஜன் அப்படியே குளுக்கோஸாக மாறி, அதிலிருந்து சக்தி எரிக்கப்படும். அதன்பிறகு, கொழுப்பு எரிக்கப்படும்.

ஆனால், அனரோபிக்கில் கொழுப்பு சக்தி நேரடியாகவே எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் செயல்பாட்டை அதிகரிக்க ஹேண்ட் சைக்கிளிங் என்ற பயிற்சி முறையும் இருக்கிறது. மற்ற உடற்பயிற்சிகளை ஒருவரின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால், சைக்கிளிங் அப்படி இல்லை. நாமே நமக்குத் தேவையான, செய்ய முடிகிற அளவில் செய்து கொள்ளலாம்.

சைக்கிளிங்குக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. இப்படித்தான் சைக்கிளிங் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். பெண்களுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடலுக்கு வசீகரமான வடிவம் கிடைக்கும். Upper body, Lower body என்று நம் உடலை இரண்டுவிதமாக பிரித்துப் பார்த்தால் லோயர் பாடியில்தான் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்திருக்கும்.

சைக்கிளிங்கில் இந்த லோயர் பாடியில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்பட்டு தசைகள் சரியான வடிவத்துக்கு வரும். குறிப்பாக, இடுப்புப் பகுதியில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க சைக்கிளிங் உதவுகிறது. சைக்கிளிங் பயிற்சி செய்யும் இயந்திரத்தை முடிந்தால் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டால் நேரம் கிடைக்கும்போது பயிற்சி செய்து கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயிற்சி செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.

வெளியிடங்களில் சைக்கிள் பயிற்சி செய்யும்போது பரபரப்பான இடங்கள், சுகாதாரமற்ற இடங்கள் போன்றவற்றைத் தவிர்த்து நல்ல சூழலில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்கை சார்ந்த சூழலாக இருந்தால் நாம் எதிர்பார்க்கிற பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகமாகவே கிடைக்கும். சைக்கிள் ஓட்டுவது கிரவுண்டாக இருந்தாலும் சரி… ஜிம்மாக இருந்தாலும் சரி… இரண்டுக்குமே பலன் ஒன்றுதான்!’’ரத்தக்கொதிப்பு, பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம்!

உடற்கழிவுகளை வெளியேற்றும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற்கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது.

உடற்பயிற்சி என்பது உடல் நிலையையும், நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள். நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.

உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற்கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது. உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.

நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம். உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

760250b3-bd70-4e74-afd7-0fc7b897f287_S_secvpfகுறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி GYM-3(Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் மேற்கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.

ஓட்டப் பயிற்சிக்கு நிகரான கிராஸ் மவுன்டைன் கிளைம்பர்ஸ் பயிற்சி

நேரம் கிடைப்பதில்லை என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் வீட்டில் செய்து வரலாம்.

ckimbers-exerciseஓட்டப் பயிற்சிக்கு நிகரான கிராஸ் மவுன்டைன் கிளைம்பர்ஸ் பயிற்சி
இளம் தலை முறையினருக்கு வேலை பளுவின் காரணமாக உடற்பயிற்சி செய்ய ஆசையிருந்தாலும் நேரம் கிடைப்பதில்லை. அதிலும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் வீட்டில் செய்து வரலாம். இந்த பயிற்சி நடைப்பயிற்சிக்கு நிகரான பலனைத்தரக்கூடியது. தினமும் உடற்பயிற்சி செய்தாலே எடையைக் குறைத்து, தேவையற்ற கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கைகள் மற்றும் முன் பாதங்கள் தரையில் ஊன்றியபடி உடல் தரையில் படாதவாறு பேலன்ஸ் செய்ய வேண்டும். இடது பாதத்தை வலது கைக்கு நேர்க்கோட்டில் கொண்டுவந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பிறகு வலது பாதத்தை இடது கைக்கு நேர்க்கோட்டில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 5 முதல் 8 நிமிடங்கள் செய்யலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். ஓட்டப் பயிற்சிக்கு நிகரானது. அதிக அளவில் கலோரி எரிக்கப்படும். உடலின் பின் பகுதி தசைகள் குறையும்.

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி

old-people-doing-exerciseஇன்றைய அவசர உலகத்தில் பலருக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதும் என்று செய்து வருகிறார்கள். ஆனால், இது போதாது என்கிறது சமீபத்திய ஆய்வு.

பொதுவாக நமது உடல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்களை எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கழிவாக வெளியேற்றுகிறது. இதற்கு செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம் சரியாக இருக்கவேண்டும். இந்த இயக்கங்கள் முழுமையாக நடைபெற 400-க்கும் மேற்பட்ட தசைகள் வேலை செய்கின்றன. இவை தொடர்ந்து செயல்பட நாம் ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.

அப்படி நாம் செய்யும் பயிற்சி இந்த 400 தசைகளை நீட்டி, மடக்கும் விதமாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடம் fe858840-c952-4872-b5ad-d305c08cdd07_S_secvpfமட்டும் பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 30 நிமிடங்களாவது பயிற்சி செய்ய வேண்டும். இதில் முதல் 10 நிமிட பயிற்சி உடலின் தசைகளை தளர்வாக மாற்ற உதவுகிறது. அடுத்த 10 நிமிட பயிற்சி உடலின் அனைத்து பாகங்களுக்கும் நல்ல ரத்த ஓட்டம் பாய உதவுகிறது. அதற்கடுத்து செய்யும் 10 நிமிட பயிற்சிதான் இந்த 400 தசைகள் சுறுசுறுப்பாக இயங்க தேவையானதாக இருக்கிறது.

அப்போதுதான் உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும். வனப்பான உடல் பொலிவு என்பதும் உடற் பயிற்சியை வைத்தே வருகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்க 30 நிமிட பயிற்சி போதாது. அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளே கொழுப்பைக் குறைக்கும் என்கிறது, அந்த ஆய்வு. எப்படியானாலும், குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி அவசியம்.

உடற்பயிற்சிக்குப் பின் செய்யக்கூடாத தவறுகள்

அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயிற்சி செய்வதே வீணாகிவிடும்.

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கடுமையான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இதனால் தீவிரமான பிரச்சனை ஏதும் நேராமல் தடுக்கும்.

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடனே உடைகளை மாற்ற வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர்த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப் புகுந்திருக்கும். அத்தகைய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தவறாமல் உடற்பயிற்சிக்கு பின், உடைகளை மாற்றுவதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.

sசிலர் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், குளித்துவிட வேண்டும். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறோம் என்று அர்த்தம். ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடுவது நல்லது.

உடற்பயிற்சிக்கு பின் போதிய அளவில் சிலர் தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இப்படி தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடற்பயிற்சியின் போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.

நன்கு உடற்பயிற்சி செய்து, அன்றைய நாள் சரியான அளவில் தூங்காமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றலானது கிடைக்காமல் போகும். மேலும் அனைவருக்குமே தெரியும், தூக்கத்தை மேற்கொண்டால் தான், உடற்பயிற்சியின் போது பாதிப்படைந்த தசைத் திசுக்கள் அனைத்தும் புத்துயிர் பெறும் என்று. ஆகவே சரியாக தூங்காமல் இருந்தால், மறுநாள் எப்படி உடற்பயிற்சியை ஆரோக்கியமாக செய்ய முடியும். எனவே நல்ல நிம்மதியான தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

உடல் எடையை குறைக்க உதவும் நடைப்பயிற்சி

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும்.
walking-exercise-doing-method

உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும்.

ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும்.

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில் உள்ள ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே.

நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.

அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது. வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது.

ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும். எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். எனவே, அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம். சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது.

உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது. இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.