மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

மாலை நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது ஆற்றல் திறன் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

நாள் முழுவதும் வேலை பார்த்த சோர்வால், உடல் அமைதி பெற உகந்த நேரமாக மாலை நேரம் விளங்குகிறது. இந்நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது ஆற்றல் திறன் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும். சாயங்கால உடற்பயிற்சியாக இருந்தாலும் கூட, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும்.

சாயந்தர வேளையில், உடற்பயிற்சி செய்வதற்கு முன், உங்கள் உடலை அதற்கு தயார்படுத்த வேண்டும். உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்காவது எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும். மாலை வேளை உடற்பயிற்சியின் முக்கியமான டிப்ஸ் இது. நிறைந்த வயிற்றுடன் உடலை வருத்தும் போது உங்களுக்கு குமட்டல் ஏற்படலாம்.

சில நேரம் நலக்குறைவும் ஏற்படும். உடற்பயிற்சிக்கு முன் கவனமாக இல்லாவிட்டால், வயிற்று வலி, தசை வலி மற்றும் சோர்வு போன்ற பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் மனதுக்கும் உடலுக்கும் தோதை ஏற்படுத்தும் நேரத்தை தேர்ந்தெடுத்து உடற்பயிற்சியை செய்யுங்கள்.

உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் உங்கள் உடலுக்கு சிறிது ஓய்வு தேவை. அளவுக்கு அதிகமான அழுத்தம் சோர்வையும் தளர்ச்சியையும் ஏற்படுத்தும். அதனால் உங்கள் அலுவலக வேலை முடிந்த பின், குறைந்தது ஒரு மணி நேர இடைவேளைக்கு பின்னர் உடற்பயிற்சியை தொடங்குவதே பயனை தரும்.

weight-lifting-of-the-good-or-badசாயந்திர வேளையில் செய்யப்படும் உடற்பயிற்சிகளுக்கு இது ஒரு சிறந்த டிப்ஸ். அதே போல் சீரான நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உங்கள் உடலை அதற்கு தயார் படுத்துங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு கப் காபி குடித்தால், தீவிரமான தரை உடற்பயிற்சிகள் மற்றும் இதய சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உடலுக்கு வலு கிடைக்கும்.

மேலும் அது உங்கள் தலை பாரத்தை குறைந்து புத்துணர்ச்சியையும் உண்டாக்கும். ஒரு வேலை நீங்கள் காபி குடிக்காதவர் என்றால், கிரீன் டீ குடியுங்கள். உங்கள் வலுவையும் ஆற்றல் திறனையும் அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை கிரீன் டீயும் கூட அளிக்கும்.

அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன், அல்லது செய்த பிறகு, ஒரு கப் காபி அல்லது டீயை குடியுங்கள். தண்ணீர் என்பது சாயந்திர உடற்பயிற்சிக்கு அவசியமான ஒரு பொருளாகும். நாள் முழுவதும் வேலை செய்து, சோர்வுடன் திரும்பும் போது, உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றிப்போகும்.

உங்கள் உடல் எப்போதும் நீர்ச்சத்தால் நிறைந்திருக்க வேண்டும். அதனால் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதும் கூட, இடைவேளையின் போது சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். உடலில் உள்ள தண்ணீர் உங்கள் ஆற்றல் திறனை மேம்படுத்தும்.

அதனால் அது உங்கள் சோர்வை முறிக்கும். மாலை நேர உடற்பயிற்சிகளுக்கு பிறகு, இரவு உணவை அதிகளவில் உண்ணக்கூடாது. கொழுப்புச் சத்து நிறைந்துள்ள உணவிற்கு பதில், சாலட் மற்றும் சூப் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். உடற்பயிற்சி செய்த பிறகு கடைப்பிடிக்க வேண்டியது இது.

உடற்பயிற்சி என்பது இளமையானவர்களுக்கு மட்டுமா?

உடல் ஆரோக்கியத்துடன் வாழ அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம்.

exercises-only-for-youth

உடற்பயிற்சி என்பது இளமையானவர்களுக்கு மட்டுமா?
ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் “ஏரோபிக்”, யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலுருந்து முதியோர்களை காக்கவல்லது.

முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது.

முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி

men-and-women-cycling-in-gym-bikeதொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் எளிதாக செய்ய முடியும். மேலும் கற்பழிப்பு, கடத்தல் போன்ற எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்தும் உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள முடியும்.

எதிர்பாராமல் நடக்கும் ஆபத்துக்களுக்கு காரணம் நமது தனிமையும், அழகும், நம்மிடம் இருக்கும் உடைமைகளும்தான். இவற்றை இன்னொருவர் கைப்பற்ற நினைக்கும்போது ஆபத்து நமக்கு மிக அருகில் வருகிறது.

நவீன ஜிம்களில் இதயத் தசைகளுக்குத் தேவை யான உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்பு யுக்திகள் கற்றுத் தரப்படுகின்றன. அவைகளை முழுமை யாக கற்றுக் கொள்ள அகன்ற பரப்புடன் கூடிய வசதியான உடற்பயிற்சிக் கூடத்தை தேர்ந் தெடுங்கள். அங்கு குத்துச்சண்டைக்குப் பயன் படுத்தும் பேடுகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை வசதியாக உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், உடற்பயிற்சி களைத் தொடர்ந்து முனைப்புடன் செய்யும் வழிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் போன்றவை பற்றியும் அவர்கள் கற்றுத்தர வேண்டும்.

உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு9fb7cc56-c621-4f12-8041-48864803f2d6_S_secvpf தேவையான மருத்துவ ஆலோசனைகள், எலும்பு, மூட்டு இணைப்புகள் ஆகியவற்றைப் பராமரிக்கும் விதம் மற்றும் முதுகு வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள் போன்றவை முறையாக கற்றுத்தரப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் பயிற்சி பெறுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 700 கலோரிக்கான சக்தியை செலவிடுகின்றனர். முதலில் குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கும் பயிற்சியாளர்கள், நாளடைவில் பயிற்சியின் மேல் உள்ள ஆர்வத்தில், படிப்படியாக அதிகளவு நேரத்தை ஒதுக்குகிறார்கள்.

முறையாக செய்யப்படும் உடற்பயிற்சியே பெண்களுக்கு தேவையான முழு ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும்.

உங்களுக்கான உடற்பயிற்சியை தேர்வு செய்யுங்கள்

எந்த உடற்பயிற்சி உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்து அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

முறையான உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 28 வயது முதல் 68 வரையிலான வயதுடையவர்களுக்கான உடற்பயிற்சி வகைகளும், கால அவகாசமும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு உடற்பயிற்சி கால அளவினை உங்கள் மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம்.

அல்லது நீங்கள் 65 வயதைக் கடந்தவர் எனில் உங்கள் உடலின் ஸ்டமினா கோருவதைப் பொறுத்து கால அளவை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.

1. 35 முதல் 45 நிமிட நடைப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின் இறுதியில் ஐந்து நிமிட மூச்சுபயிற்சி.

2. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவில் 5 நிமிட புல் அப்ஸ்.

3. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவுல் 15 நிமிட யோகா.(தேர்ந்தெடுத்த ஆசனங்கள் மட்டும்)

4. எரோபிக் உடற்பயிற்சி எனில் 35 நிமிடங்கள், 5 நிமிட அமைதியான இருத்தல்

5. அவுட்டோர் சைக்கிளிங் என்றால் 30 நிமிடம்

6. உடற்பயிற்சி எந்திரங்களில் ஏரோபிக் பயிற்சி என்றால் 30 நிமிடம்

7. டிரெட் மில் எனில் 15 +15 நிமிடங்கள் இரண்டு நிமிட இடைவேளி எடுத்துக்கொண்டு.

8. நீச்சல் பயிற்சி – வார்ம் வாட்டர் பூல் எனில் 30 நிமிடங்கள், நார்மல் வாட்டர் எனில் 45 நிமிடங்கள்

9. படிக்கட்டுகளில்sixpack-and-excercise-method ஏறி இறங்குவது( 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும், மூட்டுவலி பிரச்சனை இல்லாதவர்கள் செய்யலாம். அடுக்கங்களில் 150 படிக்கட்டுகள் ஏறி இறங்கலாம். 30 நிமிடங்கள்)

10. பாட்மிட்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஃபுட்பால், ஸ்குவாஸ் போன்ற விளையாட்டுகள் எனில் குறைந்தது 1 மணிநேரம்.

இந்த பயிற்சிகள் எல்லாவற்றையும் தினமும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதில் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்து அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

ஸ்கிப்பிங் மிக சிறந்த வார்ம் அப் பயிற்சி

skipping-exercise-for-healthy-lifeஉடலினை உறுதிசெய்ய உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்று, பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும்.

கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும்.

இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். வார்ம் அப் பயிற்சிகள் முடிந்ததும், ஸ்டிரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஸ்டிரெச்சிங் பயிற்சிகள், இறுக்கமான தசைகளைச் சற்று தளர்வடையச் செய்து, உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க உதவும்.
இந்தப் பயிற்சிகள் உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும், தசை நார்களில் வலி ஏற்படாமல் இருக்கவும் துணைபுரியும். உடல் உள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யப்படும் வார்ம் அப் பயிற்சிகளில், மிகவும் முக்கியமானது ஸ்கிப்பிங். ஸ்கிப்பிங் செய்ய சாதாரண பிளாஸ்டிக் கயிறுகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான, ஸ்கிப்பிங் ரோப் கடைகளில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

முதுகுக்குப் பின் ஸ்கிப்பிங் ரோப் இருக்கும்படி, ஸ்கிப்பிங் கட்டைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மிதமான வேகத்தில் கைகளைச் சுழற்றி, ரோப்பை முன்புறம் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில், மெதுவாகக் குதித்தபடி, ரோப் கால்களில் மாட்டிக்கொள்ளாமல் பின்பக்கம் கொண்டுவர வேண்டும். இப்படி, மித வேகத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும். எனவே, உடற்பயிற்சி செய்ய எளிதில் தயாராக முடியும்.

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பை கரைக்கும் சூப்பரான உடற்பயிற்சி

இடுப்பு பகுதி பருமனை மிக எளிதான உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த கொழுப்பானது கரையாமல் அப்படி தங்கி விடும்.

இதனால் தடித்து மிக அசிங்கமாக காணப்படும், இதுதவிர மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இந்த பருமனை மிக எளிதான உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

* ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இதை ஆரம்பத்தில் 20 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

* தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படியே தொடர்ந்து 20 தடவைகள் செய்து வந்தால் இடுப்பு பருமனை குறைக்கலாம்.

* தரையில் கால்களை நீட்டியபடி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முன்புறமாக எழுந்து நிமிர்ந்து கைவிரல்களால் கால் விரல்களை தொட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். இப்பயிற்சி வயிற்று கொழுப்பை கரைக்கும். முதுகு பகுதிக்கு வலிமை கொடுக்கும்.

கைகள், தோள்பட்டைகளுக்கான புஷ் அப் பயிற்சி

இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.
man-pushups
கைகள், தோள்பட்டைகளுக்கான புஷ் அப் பயிற்சி
மார்பு அளவிற்கு இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கெதிரில் தரையில் ஊன்றி, கால்களை ஒன்று சேர்த்து பின்னுக்கு நீட்டிக் கொள்ளவும். கால் விரல்களை பூமியில் படிய வைத்து தலை நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு சுவாசத்தை நெகிழ்த்தவும். அதாவது உடல் தரையில் படாமல் உள்ளங்கைகளும், கால் விரல்களும் மட்டுமே தரையில் பட வேண்டும்.

பிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தரையில் உடல் படக்கூடாது. இந்நிலையில் சுவாசத்தை உள் இழுத்துக் கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை நிமிர்த்தவும். உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் படுத்தல் கூடாது.

இதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம் சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.

சற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை, கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.

முதுகுத் தசைகளை வலுவாக்கும் பயிற்சி

முதுகு தசைகளை வலுவாக்க பார்பெல் ரோயிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

man-doing-barbell-rowing-workoutஉடலுக்கு உறுதியை மட்டும் அல்ல, மனதுக்கும் உற்சாகத்தைப் பாய்ச்சும் உடற்பயிற்சியை ஒருசிலர் மட்டுமே ஆர்வம் குறையாமல் மேற்கொள்கின்றனர். ஆரோக்கியம் காக்க வேண்டும் எனில், வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி அவசியம்.

வாக்கிங், ஜாகிங் போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் போதும் என்பது தவறு. சமையலுக்குப் புளிப்பு, உப்பு, காரம் எப்படி முக்கியமோ… அதுபோல உடற்பயிற்சிக்கு கார்டியோ மற்றும் எடைப் பயிற்சி மிகவும் அவசியம்.

பார்பெல் ரோயிங்  (barbell rowing):

விரிப்பில் நின்று கொண்டு உடலை வளைத்து, இரண்டு கைகளாலும் பார்பெல்லை பிடித்து கால் கீழ்மூட்டு வரை தூக்க வேண்டும். இந்த நிலையில், கைகள் மடங்கக்கூடாது. நேராக இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்தபடி பார்பெல்லை இடுப்பு வரை மேலே உயர்த்த வேண்டும்.

சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி, மெதுவாக பார்பெல்லை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.  பயிற்சியாளர் பரிந்துரைக்கும் அளவுக்கு இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன் மூலம் முதுகுத் தசைகள் நன்றாகப் பலம் பெரும்.

குறிப்பு: முதுகு தண்டு பிரச்சனை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

வாக்கிங் – ஜாகிங்

walking-exercise-doing-methodசிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாகிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாகிங் என்றால் ,ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.

நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாகிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். jogging-man-and-womenரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. ஜாகிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்னை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாகிங் பாதிக்கும். ஜாகிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும்.

ஜாகிங் போவதை விட, விறு விறுப்பாக “வாக்கிங்’ போவதே நல்லது. அதனால், உடலில் கலோரி எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது; பல வகையில் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

உடல் தசைகளை வலுவடைய செய்யும் நீச்சல் பயிற்சி

தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடல் தசைகளை வலுவடையும்.

 நீச்சல் என்பது பண்டைய காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில் நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது.நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதபடுகிறது.

கலோரி கணக்கீடு

சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் எரிக்கபடும் கலோரிகள்.

நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், வேகமாக, தீவிரமான முயற்சி மேற்கொள்ளும் போது அ=862. கி.கலோரிகள் , பெ=739. கி.கலோரிகள எரிக்கப்படும்.

நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், மிதமாக பயிற்சி மேற்கொள்ளும் போது அ=603. கி.கலோரிகள் , பெ=518. கி.கலோரிகள எரிக்கப்படும்.

நீர் நிலைகளில் ஏற்படும் ஆபத்தின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீச்சல் தேவைப்படுகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம்.

நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது.

சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.