தொடை பகுதியில் உள்ள‍ அதிகப்படியான‌ சதையைக் குறைக்க சில குறிப்புக்கள்

தொடை பகுதியில் உள்ள‍ அதிகப்படியான‌ சதையைக் குறைக்க சில குறிப்புக்கள்
2ba83fe3-4166-4f38-b69e-8f604b141a82_S_secvpfஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறை கள் உள்ளன. ஆனால் இந்த
உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனி த் தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின்பேரில் சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது.
உடலுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் சில நேரங்களில் கடு மையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தொடைப் பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையை க் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் கீழே கொடுக்கப்பட்டு ள்ளன. குறிப்பாக இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப் படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. சரி, இப்போது பயிற்சிக்குப் போகலாம்.
* பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.
* கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்த வண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும்.
* இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்ற வும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்ற வும்.பின்னர் அடுத்த 60வினாடிகள் அதேபோல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும்.
* இதுபோல் மாறிமாறி ஆறுமுறை செய்யவும். இப் பயிற்சி செய்யும் போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
* இப்பொழுது அதே நிலையில் நின்றவாறு, வலது பக்க இடுப்பை எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கித் தள்ளவும். அதே நிலையில் 8f93fdd1-e1d9-4bfb-9367-1fc29fb9c4e8_S_secvpfஇருந்தவாறு, இடுப்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுழற்றவும். சுற்றி முடித்தவுடன், மறுபடியும் நேராக நின்று கொள்ளவும்.
* இப்பொழுது இடது பக்க இடுப்பை அதேபோல் முன்னோக்கித் தள்ள வே ண்டும். பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும், இடமிருந்து வல மாக 30 வினாடிகளும் மாறி மாறி சுழற்றவும். முடித்த வுடன் மறுபடியும் நேரான நிலைக்கு வந்து விடவும்.
* கால்களை நகர்த்தாமல், இப்பொழுது இடுப்பை மட் டும் வலதுபுறமாக சுமார் 15செ.மீ முதல் 20செ.மீ வரை தள்ளவும். இதே நிலையில் இருந்தவாறு, உடம்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகள் வரை சுற்றவும். பின்னர் வலமிருந்து இடமாக 30 வினா டிகள் சுற்றவும். முடித்த பின்னர் இடுப்பை பழையபடி நேரான நிலைக்கு கொண்டு வந்து விடவும்.
*மறுபடியும் இடுப்பை அதேபோல் இடதுபுறமாக 15செ.மீ முதல் 20 செ.மீ வரை தள்ளவும். இதே நிலையில் உடம் பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுற்றவும். முடித்த பின்னர் இடுப்பை பழையபடி நேரான நிலைக்கு கொண்டு வந்துவிடவும்.
இப்பயிற்சியை நடுவில் இடைவெளி எதுவும் இல்லாம ல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவு தூரம் இடுப்பை சுற்ற முடிகிறதோ அவ்வளவு சுற்றினால்போ தும். அதிகதூரம் சுற்றமுடியவில்லையே என்ற கவலை வேண்டாம். பயிற்சியைத் தொடர்ந்து செய்ய செய்ய நாளடைவில் சுற்றும் தூரம் அதிகரிக்கும்.

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்…

1671525
சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள 
வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிக மானால், வேகமாக சைக்கிள் ஓட்டும் போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.

முதலில் மெதுவாகத் தொடங்கி,  மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியா கத்தான் சைக்கிளின்வேகத்தை அதிகப்ப டுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில்  ஓட்டுவது சிறந்தது.

காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண் பகல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது, அதிக வெப்பநிலை காரணமாக,  உடல்எளிதில் சோர்வடைந்துவிடும்.

இதயத்துடிப்பை அதிகப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்கவும், தசைக ளை வலிமைப்படுத்தவும் சைக்கிளிங் உதவுகிறது. கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையி்ல் சமன் செய்ய உதவும். தளர் வான உடைகள், தரமான காலணிகளை  அணிந்து கொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தை த் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல்  மாசு
ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஓய்வுநேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற் கொள்ளலாம். இதன்மூலம் புதிய இடங்களை யும் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.

1685307சிறு வயது முதலே சைக்கிளிங் செய்வதால், உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுப் பொரு ட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது.

முன்பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சி
யை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கால் தசைகள் கூடுதல் பலம் பெறும். தினமும்  ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி  பெறும்.

உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும். உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளி யேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி

அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான பயிற்சிகளை பார்க்கலாம்.

neck-workout

உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து, முதுகெலும்பு, கண்கள், விரல்கள், இடுப்பு உள்ளிட்ட உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃபிட்டாக இருப்பதற்கான எளிமையான பயிற்சிகளை பார்க்கலாம்.

பயிற்சி 1: நிமிர்ந்த நிலையில் நாற்காலியில் அமர வேண்டும். வலது கையை வலது கன்னத்தில் பதித்து, இடது பக்கம் மெதுவாகத் திருப்பி, சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல இடது பக்கத்துக்கும் என தலா மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மூளையில் இருந்து வரும் நரம்புகளைத் தூண்டிவிடும். கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மன அழுத்தத்தைச் சரிசெய்யும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

பயிற்சி 2: இரு கைகளையும் கோத்து, கட்டை விரல்களை தாடையின் அடியில்வைத்து, கழுத்தை மெதுவாக மேலே தூக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல, கைகளை தலைக்குப்பின் கோத்து, கழுத்தை மென்மையாகக் கீழே அழுத்த வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

பயிற்சி 3: நாற்காலியில் நேராக அமர்ந்தபடி, தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக, காது தோள்பட்டையில் படும்படி, சாய்க்க வேண்டும். பின், வலது தோள்பட்டையின் பக்கம் சாய்க்க வேண்டும். இதேபோல், தலையை  மேலே உயர்த்தியும் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடியும் செய்ய வேண்டும்.

பலன்கள்: மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். கழுத்துப் பகுதி வலிமை பெறுவதுடன், அந்தப் பகுதியில் இறுக்கம் குறையும். வளைவுத்தன்மை அதிகரிக்கும்.

உணவுக்குப் பின், இரண்டு மணி நேரம் கழித்து இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள், காலை 11 மற்றும் மதியம் 3 மணி அளவில், கை விரல்கள், கழுத்து, தோள்பட்டை போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்வது புத்துணர்வு அளிக்கும்.

ஆண்களின் வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சி

ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.

man-doing-dumbbell-pushupsஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.

15 வயது தொடக்கத்தில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது.

20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை வளர்க்க ஆரம்பியுங்கள். ஏனெனில் இது தான் தகைளை வளர்ப்பதற்கான மற்றும் தசைகள் வளர்வதற்கான சிறந்த வயது.

30 வயது முதல் 40 வயது வரை உள்ள காலகட்டத்தில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.

sixpack-and-excercise-method40 வயதின் தொடக்கதில், 50 வயது முடிவில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. தினமும் சிறிது பளுத் தூக்கும் பயிற்சி, ரன்னிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும் அற்புதமான ஓர் உடற்பயிற்சியே.

60 வயதிலிருந்து நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால் நடப்பயிற்சியை செய்து வரலாம்.

உடற்பயிற்சி – நம்பிக்கைகள் உண்மைகள்

man-doing-barbell-rowing-workoutடற்பயிற்சியை பொறுத்த வரை நமக்கு நிறைய சந்தேகங்கள்  எழும். அதில் எது உண்மை, எது தவறு என புரியாமல் குழப்பம் வரலாம். நமக்கு தோன்றும் சாதாரண சந்தேகங்களில் எது சரி, எது தவறு என தெரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை: காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்தால், உடலின் எடை தானாகவே குறைந்துவிடும்.

உண்மை: இது ஒரு தவறான கருத்து. காலை உணவை நாம் கட்டாயம் தவிர்க்கக் கூடாது. ஏனென்றால், காலை உணவுதான் இரவு முழுவதும் நாம் சாப்பிடாமல் இருப்பதை உடைத்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. உண்மையில் காலை உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியம் தரும் முறையான உணவுப்பழக்கத்திலிருந்து (நியூட்ரியன்ட்ஸ்) நம்மை விலக்கிச் செல்வது ஆகும். இதனால் நிச்சயம் நமது எடை குறையாது. நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது, அடுத்த வேளை உணவை அதிகம் எடுக்கத் தூண்டும். இதுவும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

நம்பிக்கை: ஆரோக்கியமான, வலுவான உடலைப் பெற கடுமையான உடற்பயிற்சிகள் தேவை.

உண்மை: நல்ல பலம் வாய்ந்த உடலைப் பெற வேண்டுமென்றால், புல் வொர்க்கர் போன்று தசைக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கருவிகளில் பயிற்சி மேற்கொண்டால்தான் முடியும் என்பதுகூட தவறான அபிப்ராயம்தான். அதற்குப் பதிலாக நல்ல முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் ஆரோக்கியமான உடலை அளிக்கும்.

11நம்பிக்கை: உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியைப் பலமுறை செய்துவந்தால், இடுப்புப் பகுதியில் விழும், டயர் போன்ற மடிப்பு நீங்கிவிடும்.

உண்மை:
இடுப்புப் பகுதி பெரிதானவர்கள், தொப்பை உள்ளவர்கள் தவறாமல் செய்வது உட்கார்ந்து எழும், ‘சிட் அப்’ பயிற்சிகளைத்தான். இதைச் செய்தால் வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பு கரைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இது, உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. ஏனென்றால், நம் உடலில் கொழுப்பு உற்பத்தியாகி ஒரே பகுதியில் மட்டும் சேருவது இல்லை. ‘சிட் அப்’ பயிற்சி இடுப்புப் பகுதி தசை வலுப்பெற உதவும். இதனுடன், வாக்கிங், ஜாகிங் மற்றும் வயிறு, இடுப்புக்கான பயிற்சிகளை சேர்த்துச் செய்ய வேண்டும்.

நம்பிக்கை:
கடினமான உடற்பயிற்சியே பெரிய அளவிலான வெற்றியைத் தரும்.

உண்மை:
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு வேண்டுமானால், கடுமையான உடற்பயிற்சித் தேவைப்படலாம். மற்றவர்களுக்குக் கடுமையான உடற்பயிற்சி தேவை இல்லை. ‘நோ பெயின் நோ கெயின்’ (No Pain; No Gain) என்று சொல்வது உடற்பயிற்சி விஷயத்தில் ஓரளவுக்குத்தான் பொருந்தும். உடற்பயிற்சி செய்யத்தான் வேண்டும்… அதற்காக, வலி உண்டாகும் அளவு செய்யத் தேவையில்லை. அது, வேறுவிதமான ஆபத்துக்களை உண்டாக்கிவிடும்.

53ef8908-d005-40c6-9013-448ee94a0aee_S_secvpfநம்பிக்கை:
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது.

உண்மை: சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வதில் தவறு இல்லை. பொதுவாக, விளையாட்டு வீரர்கள் நன்றாகச் சாப்பிட்ட பிறகே பயிற்சி மேற்கொள்கிறார்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படுவதைவிட அதிக கலோரி அவர்களுக்குத் தேவை என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். சாப்பிட்ட மதமதப்பு உடலில் நீங்கிய பின் உடற்பயிற்சி செய்வது தவறு இல்லை. ஆனால் சாப்பிட்டவுடனே செய்ய வேண்டாம்.

நம்பிக்கை: விடியற்காலைப் பொழுதில்தான் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

உண்மை: ராணுவம் மற்றும் படைக்கலன் துறைகளில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். சரிப்பட்டும் வரலாம். மற்றபடி உடற்பயிற்சி செய்வதற்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெயில் மிகுதியான, வெப்பமான இடங்களில் உடற்பயிற்சி செய்தால், தேவைக்கு அதிகமான அளவு வியர்வை வெளியேறி உடல் விரைவாகச் சோர்வடையும்.

காலை நேர உடற்பயிற்சி சிறந்ததா

காலையில் செய்யும் உடற்பயிற்சிகள் அன்றைய தினம் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
best-for-morning-exercises
காலை நேர உடற்பயிற்சி சிறந்ததா
இந்த கால இளைஞர்கள் வேலையை காரணம் காட்டி உடற்பயிற்சி செய்யாமல் தவிர்க்கிறார்கள். இதனால் பிற்காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி கவலைப்படுவதில்லை.

தற்போதுள்ள காலகட்டத்தில் வேலைமுறையை மாற்ற முடியாத சூழலில், குறைந்தபட்சம் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரமான சூழலில் நல்ல காற்றை சுவாசித்து, தளர்வான உடைகள் அணிந்து அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாலையில் கூடுதலாக வேண்டுமானால் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். அதற்காக, காலை உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. மாலை உடற்பயிற்சியில் அன்றைய தினம் சாப்பிட்ட கலோரிகளைதான் எரிப்போம். ஏற்கெனவே உடலில் சேர்ந்திருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு காலை வேளை உடற்பயிற்சியே சிறந்தது. முக்கியமாக, அடைத்துவைக்கப்பட்ட அறைக்குள், பலருடன் கூட்டாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் 30 நிமிடம் காலை, மாலை இருவேளை உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் ஆரோக்கியத்தைதரும். இருவேளை செய்ய முடியாதவர்கள் காலை மட்டும் செய்யலாம். வேலை காரணமாக காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் மாலையில் செய்யலாம்.

வாரம் முழுவதும் பயிற்சி செய்ய முடியாதவர்கள் வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்யலாம்.

வேகமாக கலோரி எரிக்கும் பயனுள்ள 3 பயிற்சிகள்

உங்கள் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கும் பயிற்சிகள் இவை.
effective-fast-calorie-burning-3-exercises
வேகமாக கலோரி எரிக்கும் பயனுள்ள 3 பயிற்சிகள்
உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும்.

ரோவிங் (Rowing workouts)

இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், அரை மணி நேரத்தில் 377 கலோரிகளை எரிக்கலாம். இந்தப் பயிற்சியில் வேகமாக முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டே இருப்போம் என்பதால், இடுப்புப் பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

‘கோர்’ தசைகள் வலுவடையும். இதன் மூலம், தசைகளில் எளிதில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். முழு உடலுக்கான பயிற்சி இது. எனவே, உடல் உறுதியாகும். உடல் எடை குறைப்பவர்களுக்கு ஏற்ற பயிற்சி. கயிற்றை நன்றாக வேகமாக இழுக்கும்போது, முன் கையில் இருக்கும் தசைகள் வலுப்பெறுகின்றன.

எலிப்டிக்கல் ட்ரெய்னர் (elliptical Trainer workouts)

கை, கால் இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்துச் செய்யும் பயிற்சி இது. அரை மணியில் சுமார் 370 கலோரிகள் வரை எரிக்க முடியும். வீட்டிலேயே இந்தக் கருவியை வைத்தும் பயிற்சி செய்யலாம். முழு உடலுக்கான கார்டியோ வொர்க்அவுட்களில் சிறந்த பயிற்சி இது. இந்தப் பயிற்சியில் உடல் முழுவதும் இயங்கும்.

கைப்பிடியில் கையைப் பிடித்துக்கொண்டு, வெறுமனே கால்களால் நடக்கக் கூடாது. கைகளை நன்கு அசைக்க வேண்டும். இதன் மூலம், தோள்பட்டை நன்றாக வலுவடையும். ‘கோர்’ தசைகள் வலுப்பெறும். மலை ஏறுவதுபோல இதில் செட்டிங் மாற்றிக்கொள்ளலாம். இதயத் தசைகள் வலுப்பெறும்.

ஸ்பின் பைக் (spin bike workouts)

கிட்டத்தட்ட சைக்கிள் ஓட்டுவதுபோன்ற பயிற்சிதான். இந்த பைக்கை நாம் ஓட்டும்போது, டிஸ்க் வடிவத்தில் ஒரு தட்டு சுற்றிக்கொண்டே இருக்கும். அமர்ந்த நிலையில் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். நடைப்பயிற்சிகூட செய்ய முடியாத அளவுக்கு மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் பயிற்சியைத் தாராளமாகச் செய்யலாம்.

அரை மணி நேரத்தில் அதிகபட்சம் 440 கலோரிகள் வரை எரிக்க முடியும். கால் தசைகள் வலுவாகும், மூட்டு உறுதியாகும். ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளவர்கள், இந்தப் பயிற்சியைச் செய்ய வலி குறையும்.

நடைப்பயிற்சி செய்பர்கள் கவனிக்க வேண்டியவை

தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது தான் மிகவும் சிறப்பானது

walking-exercise-doing-method

நடைப்பயிற்சி செய்பர்கள் கவனிக்க வேண்டியவை
தற்போதுள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அனைவருக்கும் இல்லாமல் போய் விட்டது. இதிலும் உட்கார்ந்தே வேலைசெய்வபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

உடற்பயிற்சி செய்யமுடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியை செய்யலாம்.

நடைப்பயிற்சி எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அவரவர் உடல் பருமனுக்கு ஏற்ப நடக்கும் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும்.

நடந்தால் போதும் என்று அவரவர் இஷ்டப்படி நடக்கிறார்கள். இதனால் பிரச்சினைகள்தான் உருவாகின்றன. பொதுவாக நடைப்பயிற்சி செல்லும் ஒருவர் நிமிடத்திற்கு 100 அடிகள் எடுத்து வைப்பதே நல்லது.

இதுதான் மிதமான உடற்பயிற்சி. இந்த வேகத்தில் தினமும் 30 நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சியாக அமையும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது தான் மிகவும் சிறப்பானது. காலையில் செய்யமுடியாதவர்கள் வேண்டுமானால் மாலையில் செய்யலாம்.

மற்ற பயிற்சிகளை செய்ய முடியாதவர்கள் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சியை மட்டுமாவது செய்யலாம். வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி

hamstring-crunchesபெண்களுக்கு, ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்று பகுதியில் அதிகளவு சதை போடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியாக உடற்பயிற்சி இல்லாதது. மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை. வயிற்று பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்க உடற்பயிற்சிகள் பல பயிற்சிகள் இருந்தாலும் ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி (Hamstring Crunches) என்ற பயிற்சி மிகவும் எளிமையானது.
விரைவில் பலனை தரக்கூடியது. மேலும் வீட்டில் தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்து, பாதத்தைத் தரையில் பதிக்க வேண்டும். கைகளை காதுகளோடு ஒட்டியபடி தலைக்கு மேலாகக் கொண்டுசென்று, தரையில் வைக்க வேண்டும்.
இப்போது, தலை, மார்பகப் பகுதியை முன்னோக்கி நகர்த்தி, கைகளை உயர்த்தி, விரல்கள் கால் முட்டியைத் தொடுவது போல் கொண்டுவந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், ஆரம்பத்தில் 25 முறைகள் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். அதிகளவு தொப்பை இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும்.
பலன்கள் :
வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால், கொழுப்பு கரைந்து, ஃபிட்டான வயிற்றுப் பகுதி கிடைக்கும்.

உடலை உறுதியாக்கும் ஃப்ரீ வெயிட் பயிற்சிகள்

ஃப்ரீ வெயிட் பயிற்சிகள் உடலை உறுதியாக்கும் தன்மை கொண்டவை.

free-weight-exercises-stabilizes-the-body

உடலை உறுதியாக்கும் ஃப்ரீ வெயிட் பயிற்சிகள்
இந்த ஃப்ரீ வெயிட் பயிற்சிகள் பெரும்பாலும், கருவிகள் ஏதும் இன்றி செய்யக்கூடியவை. சில பயிற்சிகளுக்கு, சிலம்பம் ஸ்டிக், டம்பெல், மெடிசின் பால் பயன்படுத்தலாம். பயிற்சியை 15 முறை செய்வதை, ஒரு செட் என்போம். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு செட்கள் செய்யலாம். பிறகு, செட்களின் அளவை அதிகரிக்கலாம்.

வால் புஷ் அப்ஸ் (Wall Push ups)

கால்களைச் சற்று அகட்டியபடிவைத்து, நேராக நிற்க வேண்டும். இப்போது, கைகளைச் சுவற்றில் பதித்து, முழு உடலும் கைகளில் தாங்கும்படி நிற்க வேண்டும். இப்போது, கையை மடித்து, நெஞ்சுப் பகுதியை சுவர் அருகில் கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள்: நெஞ்சுப் பகுதியில் உள்ள தசைகளை வலுவாக்குகிறது. அழகிய வடிவமைப்பைத் தருகிறது. கைகளுக்கு வலு அளிக்கிறது.

டம்பெல் சீட்டட் ரோ (Dumbbell seated row)

நாற்காலியில் கால்களைச் சற்று அகட்டியபடி, உடலை முன்பக்கம் சாய்த்து உட்கார வேண்டும். கைகள் மூட்டுக்கு வெளிப்பகுதியில் இருக்க, கைகளில் டம்பெல் கருவியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, டம்பெல்லை நெஞ்சு வரை கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள்: மேல் முதுகெலும்பு, கைத் தசைகளுக்கு வலு தரும் பயிற்சி இது.

டம்பெல் ஃபிரென்ட் ரெய்ஸ் (Dumbbell front raise)

நேராக நிற்க வேண்டும். கை விரல்கள் பூமியைப் பார்த்தபடி டம்பெல் கருவியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, கையை முன்பக்கமாக, தோள்பட்டை உயரத்துக்கு உயர்த்தி இறக்க வேண்டும்.
பலன்கள்: தோள்பட்டை தசைகளுக்கு வலுவளிக்கும்.