மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்

1910656விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.

நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.ad16974f-f58a-4b23-b972-d49f29c34a5c_S_secvpfமலச்சிக்கலால்  உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

சரியான முறையில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்

நீங்கள் செய்யும் பயிற்சிகளை சரியான முறையில் செய்தால் மட்டுமே அதன் பலனை முழுமையாக பெற முடியும்.
Indications-that-the-proper-exercise

ரியான முறையில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்
ஜிம்மில் சென்று உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முன், போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, ஆற்றல் கிடைக்கும். மேலும் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதையெல்லாம் பின்பற்றி, தினமும் சரியான அளவு உடற்பயிற்சியை மேற்கொண்டால் தான் நல்ல பலனைப் பெற முடியும். நீங்கள் தினமும் போதிய அளவில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வழிகள் உள்ளன.

சிலருக்கு உடற்பயிற்சியை செய்த பின் சரியான தூக்கம் கிடைக்காது. இந்நிலை அவர்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதற்கான அறிகுறி. ஆனால் ஒருவர் படுத்ததும் தூங்கிவிட்டால், அவர் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார் என்று அர்த்தம்.

உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்வதில்லை என்று அர்த்தம். மேலும் உடற்பயிற்சிக்கு முன் நிறைய தண்ணீர் குடித்தால் தான், உடற்பயிற்சி செய்வதற்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, உடற்பயிற்சியை சரியாக செய்ய முடியும். முன்பு இருந்ததை விட, சமீப காலமாக உங்கள் உடலின் ஆற்றல் அதிகரித்துள்ளதா? அப்படியெனில் நீங்கள் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் மிகவும் எடை குறைவானவராக இருந்து, உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் நன்கு பசி எடுக்கிறது என்றால் அது நல்ல அறிகுறியே. ஒருவேளை நீங்கள் எடையைக் குறைக்க நினைப்பவராயின், கலோரிகள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, பசியின் போது நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஜிம்மில் சேர்ந்திருந்து, உங்கள் எடையில் மாற்றம் தெரிந்தால், அதுவும் நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நேரத்தில் எடையைக் குறைக்க மேற்கொண்ட டயட்டையும், செய்து வரும் உடற்பயிற்சியையும் தவறாமல் தினமும் பின்பற்றுங்கள்

உடற்பயிற்சி – நம்பிக்கைகள் உண்மைகள்

man-doing-dumbbell-pushupsடற்பயிற்சியை பொறுத்த வரை நமக்கு நிறைய சந்தேகங்கள்  எழும். அதில் எது உண்மை, எது தவறு என புரியாமல் குழப்பம் வரலாம். நமக்கு தோன்றும் சாதாரண சந்தேகங்களில் எது சரி, எது தவறு என தெரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை: காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்தால், உடலின் எடை தானாகவே குறைந்துவிடும்.

உண்மை: இது ஒரு தவறான கருத்து. காலை உணவை நாம் கட்டாயம் தவிர்க்கக் கூடாது. ஏனென்றால், காலை உணவுதான் இரவு முழுவதும் நாம் சாப்பிடாமல் இருப்பதை உடைத்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. உண்மையில் காலை உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியம் தரும் முறையான உணவுப்பழக்கத்திலிருந்து (நியூட்ரியன்ட்ஸ்) நம்மை விலக்கிச் செல்வது ஆகும். இதனால் நிச்சயம் நமது எடை குறையாது. நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது, அடுத்த வேளை உணவை அதிகம் எடுக்கத் தூண்டும். இதுவும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

நம்பிக்கை: ஆரோக்கியமான, வலுவான உடலைப் பெற கடுமையான உடற்பயிற்சிகள் தேவை.

உண்மை: நல்ல பலம் வாய்ந்த உடலைப் பெற வேண்டுமென்றால், புல் வொர்க்கர் போன்று தசைக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கருவிகளில் பயிற்சி மேற்கொண்டால்தான் முடியும் என்பதுகூட தவறான அபிப்ராயம்தான். அதற்குப் பதிலாக நல்ல முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் ஆரோக்கியமான உடலை அளிக்கும்.

நம்பிக்கை: உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியைப் பலமுறை செய்துவந்தால், இடுப்புப் பகுதியில் விழும், டயர் போன்ற மடிப்பு நீங்கிவிடும்.

உண்மை:
இடுப்புப் பகுதி பெரிதானவர்கள், தொப்பை உள்ளவர்கள் தவறாமல் செய்வது உட்கார்ந்து எழும், ‘சிட் அப்’ பயிற்சிகளைத்தான். இதைச் செய்தால் வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பு கரைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இது, உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. ஏனென்றால், நம் உடலில் கொழுப்பு உற்பத்தியாகி ஒரே பகுதியில் மட்டும் சேருவது இல்லை. ‘சிட் அப்’ பயிற்சி இடுப்புப் பகுதி தசை வலுப்பெற உதவும். இதனுடன், வாக்கிங், ஜாகிங் மற்றும் வயிறு, இடுப்புக்கான பயிற்சிகளை சேர்த்துச் செய்ய வேண்டும்.

நம்பிக்கை:
கடினமான உடற்பயிற்சியே பெரிய அளவிலான வெற்றியைத் தரும்.

weight-lifting-of-the-good-or-badஉண்மை:
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு வேண்டுமானால், கடுமையான உடற்பயிற்சித் தேவைப்படலாம். மற்றவர்களுக்குக் கடுமையான உடற்பயிற்சி தேவை இல்லை. ‘நோ பெயின் நோ கெயின்’ (No Pain; No Gain) என்று சொல்வது உடற்பயிற்சி விஷயத்தில் ஓரளவுக்குத்தான் பொருந்தும். உடற்பயிற்சி செய்யத்தான் வேண்டும்… அதற்காக, வலி உண்டாகும் அளவு செய்யத் தேவையில்லை. அது, வேறுவிதமான ஆபத்துக்களை உண்டாக்கிவிடும்.

நம்பிக்கை:
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது.

உண்மை: சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வதில் தவறு இல்லை. பொதுவாக, விளையாட்டு வீரர்கள் நன்றாகச் சாப்பிட்ட பிறகே பயிற்சி மேற்கொள்கிறார்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படுவதைவிட அதிக கலோரி அவர்களுக்குத் தேவை என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். சாப்பிட்ட மதமதப்பு உடலில் நீங்கிய பின் உடற்பயிற்சி செய்வது தவறு இல்லை. ஆனால் சாப்பிட்டவுடனே செய்ய வேண்டாம்.

நம்பிக்கை: விடியற்காலைப் பொழுதில்தான் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

உண்மை: ராணுவம் மற்றும் படைக்கலன் துறைகளில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். சரிப்பட்டும் வரலாம். மற்றபடி உடற்பயிற்சி செய்வதற்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெயில் மிகுதியான, வெப்பமான இடங்களில் உடற்பயிற்சி செய்தால், தேவைக்கு அதிகமான அளவு வியர்வை வெளியேறி உடல் விரைவாகச் சோர்வடையும்.