உடலுக்கு எனர்ஜி அதிகரிக்க உடற்பயிற்சி

 விளையாட்டு வீரர்களை போல் எப்போதும் உடலை வலுவாக வைத்திருக்க விரும்புபவர்கள் எளிமையான உடற்பயிற்சியை மேற்கொண்டால் நிச்சயம் நம் உடல் உறுதியாக இருக்கும்.

மவுண்ட்டன் க்ளைம்பர் (Mountain climber exercises ) :

* இரண்டு கைகளையும் சற்று அகட்டி தரையில் ஊன்றி படுக்கவும்.

* மலை ஏறுவது போன்ற நிலையில் இடது காலை முதலில் மடக்கி படத்தில் உள்ளபடி முன்பாத விரல்களால் தாங்கி நிற்கவும்.

* அதேபோல் வலது காலை நீட்டி முன் பாத விரல்களால் தாங்கி நிற்கவும்.

* இதேபோல் கால்களை மாற்றி மாற்றி 10 முறைகள் செய்யவும்.

பலன்கள் : உடல் முழுவதும் வலுப்பெறும். முக்கியமாக இடுப்பு மற்றும் தொடை தசைகளுக்கு நல்லது.

ஸ்டெப் அப் (Step Up Exercises):

* ஒரு பென்ச் அல்லது படிக்கட்டின் மேல் ஏறவும்.

* இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி இடது காலை மட்டும் உயர்த்தவும்.

* இரண்டு கைகளையும் மேலே உயர்த்தவும்.

* அதன் பிறகு வலது காலை கீழே இறக்கி இடது காலை உயர்த்தவும்.

* இதேபோல் கால்களை மாற்றி மாற்றி 10 முறைகள் செய்யவும்.

பலன்கள் : இடுப்பு, தொடை மற்றும் கெண்டைக்கால் சதைகள் வலுவடையும்.

ஜம்ப் ரோப் (Jump Rope Exercises):

* ஒரு கயிறை எடுத்து கொள்ளவும்.

* 10 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஒரே சீரான வேகத்தில் ஸ்கிப்பிங் செய்யவும்.

பலன்கள் : உடல் முழுவதும் உள்ள தசைகளுக்கு நல்லது. உடலில் சக்தி அதிகரிக்கும்.