தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்…

இன்று பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று இதற்காக கவலை பட வேண்டியதில்லை கொழுப்பை குறைத்தாலே போதும் அதற்காக சாப்பிடாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை கொழுப்பை விரைவில் குறைக்க உதவும் 10 நிமிட உடற்பயிற்சிகள்!!!
உடல் எடையைக் குறைக்க கடுமையாக முயற்சிக்காமல், சிம்பிளான வழிகளைத் தேடுங்கள். உங்களால் தினமும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை. மாறாக, கடைகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்க உதவும் அதே சமயம் விலைக் குறைவிலும் கிடைக்கும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.
7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க…
அதற்கு அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உடல் எடையைக் குறைக்க உதவும் விலைக் குறைவில் கிடைக்கும் சில இந்திய உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.

தேன்
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் தேன். இத்தகைய தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து வந்தால் தொப்பை குறைவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
கடுகு எண்ணெய்
சமைக்கும் போது உணவில் வெஜிடேபிள் ஆயிலை சேர்ப்பதற்கு பதிலாக, கடுகு எண்ணெயை சேர்த்து வந்தால், உடலில் செரிமான மண்டலம் சுத்தமாகி கொழுப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உடல் எடையும் குறையும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!
பூண்டு
பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அவை கொழுப்புக்களை உடையச் செய்து, உடலில் சேர்வதைத் தடுக்கும். அதற்கு ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் ஒரு பூண்டை சாப்பிட வேண்டும். இப்படி பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் விரைவில் தெரியும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
ஓட்ஸ்
ஓட்ஸில் கலோரிகள் குறைவாக இருப்பது மட்டுமின்றி,   ஆற்றலையும் தருவதால், இதனை அன்றாடம் காலை உணவாக எடுத்து வருவது நல்லது.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
தக்காளி
விலைக் குறைவில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் தக்காளி. இத்தகைய தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
முட்டையின் வெள்ளைக் கரு
முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உட்கொண்டு வந்தால், அவை தொப்பையைக் குறைக்கும். ஆகவே எடையைக் குறைக்க விரும்பும் முட்டை பிரியர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
காளான்
காளான் கூட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த, தொப்பையைக் குறைக்க உதவும் சிறப்பான ஒரு இந்திய உணவுப் பொருள். அதிலும் பட்டன் காளான் தான் கொழுப்புக்களை கரைப்பதில் சிறந்தது.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
பாதாம்
ஆய்வு ஒன்றில் பாதாமை மிதமான அளவில் உட்கொண்டு வந்தால், உடல் எடை குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதாமையும் உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
மாட்டுப் பால்
கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, தொப்பையும் வருகிறது. எனவே அதற்கு பதிலாக மாட்டுப் பாலை குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பிட்டாகவும் இருக்கும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!

மீன்
றைச்சிகளை உட்கொள்வதற்கு பதிலாக, மீனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைப்பதுடன், அதில் கொழுப்புக்களும் குறைவாக உள்ளது.
சிறுதானியங்கள்
சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய தானியங்களை நம் முன்னோர்கள் அதிகம் எடுத்து வந்ததால் தான், அவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படாமல் இருந்தார்கள். எனவே இவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து உடல் எடையை குறையுங்கள்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
பாசிப்பருப்பில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் உணவில் இதனை சேர்த்து வருவது நல்லது. மேலும் இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி அதிகம் கிடைக்கும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
மஞ்சள்
அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் கூட உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு தினடும் ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!
மோர்
மோரில் 2.2 கிராம் கொழுப்புக்களும், 99 கலோரிகளும் தான் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் பருகி வந்தால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் உணவுகள்!!!

உடல் எடையை குறைக்கணுமா

எதற்குமே பக்கவிளைவு உண்டு. வாழ்க்கை வசதிகள் பெருகி, உடல் உழைப்புக் குறைந்ததன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பு, அதுதொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சரி, உடல் எடையை எப்படிக் குறைப்பது? அதற்கு இதோ சில ‘டிப்ஸ்’…
* காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது. மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
* குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை, நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.
* உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சோற்றைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேக வைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, சப்பாத்தி, தோசை வகைகள் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
* முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* பழ வகைகளில், மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப்பழங்களைச் சாப்பிடலாம்.
* அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியை குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணையில் பொரிக்காமல் குழம்பு வைத்துச் சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.
* குழந்தைகள் தினசரி ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது அரை மணி நேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
* குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்றவற்றில் கூட்டாகப் பங்கேற்கலாம்.
* காலையில் எழுந்ததும் டீ, காபி அருந்துவதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள், பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரை அளவைக் குறைத்து அருந்தலாம்.
* கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால் அவற்றைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. பொதுவாக நாவை அடக்குவது என்பது கடினமான விஷயம். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் தேவையானவைதான்.
இவற்றை ஓரேயடியாகத் தவிர்த்தாலும் மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். எனவே, உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று அதிரடியாக உணவு முறையில் மாற்றத்தைச் செய்யாமல் படிப்படியாக அதில் ஈடுபடுங்கள். நல்ல பலனைப் பெறுங்கள்!

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி – உடற்பயிற்சி,tamil

இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.
இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் தடதடவென இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்…
இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.
இப்படி ஐந்து தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும்.
இதையும் ஐந்து தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்

7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை

நீங்கள் விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் G.M டயட்டை பின்பற்றுங்கள். இந்த டயட் இருப்பதிலேயே மிகவும் ஆரோக்கியமானதும், எடையைக் குறைப்பதில் வேகமானதும் ஆகும்.

அதுமட்டுமின்றி, இந்த புரோகிராம்மை தான் உலகில் உள்ள பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்த ஜி.எம். டயட் புரோகிராமானது 7 நாட்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று. இந்த டயட்டின் முக்கியமான நோக்கம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது தான்.
இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல. அதில் சில…
* 7 நாட்களில் 5-8 கிலோ எடை குறையும்
* தொப்பை குறையும்
* சருமம் பொலிவு பெறும்
* உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம்
ஜி.எம். டயட்டை பின்பற்றுவது ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருக்கும். குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால் முதல் இரண்டு நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டால், இதர நாட்களையும் எளிதில் பின்பற்றலாம். சரி, இப்போது 7 நாள் பின்பற்ற வேண்டிய ஜி.எம். டயட்டைப் பற்றி பார்ப்போமா…!

முதல் நாள்
ஜி.எம். டயட்டில் முதல் நாளில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். ஆனால் இதில் வாழைப்பழம், லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சை போன்றவற்றை சேர்க்கக்கூடாது. மாறாக தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். உங்களுக்கு எவ்வளவு பசித்தாலும், பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். என்ன இருந்தாலும், தண்ணீர் குடிப்பதை மறக்கக்கூடாது…!

இரண்டாம் நாள்
இரண்டாம் நாளில் காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் வேக வைத்த ஒரு உருளைக்கிழங்கை 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும். பின் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையோ சாப்பிட வேண்டும். முக்கியமாக இரண்டாம் நாள் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும். வேண்டுமானால் முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து அதிகம் சாப்பிடலாம். அத்துடன் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

மூன்றாம் நாள்
மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஆனால் இந்நாளில் வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்கக்கூடாது. முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

நான்காம் நாள்
வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடவும். நான்காம் நாளில் 4 டம்ளர் பால் மற்றும் 6 வாழைப்பழங்களை சாப்பிடலாம். வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் தான். இருப்பினும் ஜி.எம். டயட்டின் போது உடலில் சோடியத்தின் அளவு குறைவதால், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். மேலும் இந்நாளில் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு கொண்டு சுவையாக சூப் செய்து குடிக்கலாம்.

ஐந்தாம் நாள்
ஜி.எம். டயட்டின் ஐந்தாம் நாள் முளைக்கட்டிய பயிர்கள், தக்காளி, பன்னீர் போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் சிக்கன் அல்லது மீல் மேக்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் ஒரு பௌல் சூப்பும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

ஆறாம் நாள்
இந்நாளன்று ஐந்தாம் நாள் பின்பற்றியது போன்று முளைக்கட்டிய பயிர்கள், காட்டேஜ் சீஸ், சிக்கன், மீல் மேக்கர் மற்றும் இதர காய்கறிகளை சாப்பிடலாம். ஆனால் தக்காளியை சேர்க்கக்கூடாது. வேண்டுமானால் இந்நாளில் சூப் குடிக்கலாம்.

ஏழாம் நாள்
கடைசி நாளன்று நீங்கள் மிகவும் ரிலாக்ஸாக உடல் பருமனின்றி லேசாக இருப்பது போல் உணர்வீர்கள். இந்நாளில் பழச்சாறுகளையும், ஒரு பௌல் சாதம் அல்லது பாதி ரொட்டி மற்றும் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். முக்கியமாக தண்ணீர் குடிப்பதை மறக்க வேண்டாம்.