உடற்பயிற்சி செய்த பின் தவிர்க்க வேண்டியவை

ஒரு ஆண் மகன் கட்டுக்கோப்புடனும், கம்பீரமாகவும் காட்சியளிக்க தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவான். அப்படி உடலமைப்பை அழகாக வைத்துக் கொள்ள தற்போது பெரும்பாலான ஆண்கள் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள்.
ஆனால் அப்படி உடற்பயிற்சி செய்தும் சிலருக்கு உடல் ஆரோக்கியமாக இல்லாமல், ஒருவித சோர்வுடன் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தவாறு இருக்கும். மேலும் ஒருசில உணவுப்பொருட்களை மற்ற நேங்களில் சாப்பிடுவதை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே உட்கொண்டால் மோசமான பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
மேலும் நிபுணர்களும், உடற்பயிற்சிக்கு பின் தண்ணீர், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது புரோட்டீன் கலந்த உணவுகளை எடுத்து வருவது மிகவும் நல்லது. ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலானது குளுக்கோஸை எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளும்.
ஆகவே உடற்பயிற்சி செய்து முடித்த பின் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாமல், படிப்படியாக உயர்த்த வேண்டும். எனவே நண்பன் தமிழ் உடற்பயிற்சி செய்து முடித்த பின் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவிர்த்திடுங்கள்.

சீஸ்
உடற்பயிற்சி செய்து முடித்த பின் சீஸ் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸில் கொழுப்புக்கள் மற்றும் உப்பு அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே உடற்பயிற்சிக்கு பின் சீஸ் சேர்த்த தின்பண்டங்களைத் தவிர்க்கவும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கரை ஏரியோபிக் உடற்பயிற்சிக்குப் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவற்றில் கொழுப்புக்கள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. இவை செரிமான மண்டலத்தை பாதிக்கும். வேண்டுமெனில் வீட்டிலேயே சிக்கனை வேக வைத்து, சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.

தானியங்கள்
பலரும் உடற்பயிற்சிக்கு பின் தானியங்களை சாப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றனர். ஆனால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்களை உட்கொள்வது நல்லதல்ல. இதனால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

பிரட் பிரட்டில்
உள்ள ஸ்டார்ச் வேகமாக சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே இதனை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல், குறைந்த அளவில் அதிலும் நவதானிய பிரட்டை எடுத்து வருவது நல்லது. முக்கியமாக வெள்ளை பிரட் எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

பழச்சாறுகள்
பழச்சாறுகளில் சர்க்கரை அதிகம் உள்ளதால், இதனை உடற்பயிற்சிக்கு பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மூலிகை தேநீர்களை குடிக்கலாம் அல்லது இளநீர் குடிக்கலாம்.

முட்டைகள்
உடற்பயிற்சிக்கு பின் முட்டை சாப்பிடுவது நல்லது தான். ஏனெனில் முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் முட்டையை எண்ணையில்பொரித்தோ, வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் வேக வைத்து சாப்பிடலாம்.

மில்க் ஷேக்
மில்க் ஷேக்கில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனையும் உடற்பயிற்சிக்கு பின் உடனே குடிக்கக்கூடாது. வேண்டுமெனில், வெறும் பால் அல்லது பாதாம் பால் அல்லது க்ரீன் டீ குடிக்கலாம்.