வயதானவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சிகள்

சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது.

ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் “ஏரோபிக்”, யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலிருந்து முதியோர்களை காக்கவல்லது. உடற்பயிற்சிக்கு விலை மதிப்புள்ள இறுக்கமான உடைகள் தேவை இல்லை. சௌகரியமான உடைகளே போதுமானது. முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன.

பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது. முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும்.

வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை உடற்பயிற்சி செய்தால், கீழ்காணும் நன்மைகள் பெறலாம் :

1. எடையை கட்டுப்படுத்தலாம்

2. திண்மையும் வலிமையும் பெறலாம்

3. மூட்டுகளிலும் தசைகளிலும் இளக்கம் பெறலாம்

4. மனஅழுத்தம் குறைக்கலாம்

5. நம் மதிப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தலாம்

6. எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலிமை ஏற்படுத்தலாம்

7. மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்தலாம்.

8. மூப்படையும் போது வலிமையை பேணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *