உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?

உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல!

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?
உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். ஆனால் தொப்பை குறையுமா? பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும், அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.

உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது. இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள். சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது. அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.

தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.

வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.

உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.

உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

கடமைக்கு ஜாகிங், நடைப்பயிற்சி என்று செல்லாமல், ஆர்வத்தோடு இந்தப் பயிற்சிகளைச் செய்துவந்தால், ஆரோக்கியம் நம் வசமாகும். நம் உடலையும் மனதையும் ஒருங்கே தயார்ப்படுத்தும் காலை நேரப் பயிற்சிகளை பார்க்கலாம்.

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)

தரையில் நேராக நின்று, இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் உடலை பேலன்ஸ் செய்தபடி இருக்க வேண்டும். பிறகு, அப்படியே மேல் நோக்கிக் குதித்து, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

சீரான இதயத் துடிப்புக்கு உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. காலின் வடிவமைப்பை மேம்படுத்துகிறது.

லஞ்சஸ் (lunges exercise)

தரையில் நேராக நிற்க வேண்டும். பின், இரண்டு கால்களையும் முன் பின்னாக நன்கு விரித்து வைக்க வேண்டும். இப்போது, வலது காலை சற்று முன் நோக்கி மடக்கி, இடது காலால் முட்டியிட்ட நிலையில் இருக்க வேண்டும். சில விநாடிகள் கழித்து, படிப் படியாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று, இடது காலை மடக்கி, வலது காலை முட்டி போட்ட நிலையிலும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி 15 முறை செய்ய வேண்டும்

பலன்கள்:

உடலுக்கு அதிகமாக உள்ள கலோரியின் அளவைக் குறைக்கிறது. கால் மற்றும் முட்டியின் வலு அதிகரிக்கும். கால்களில் உள்ள தசைப்பகுதி வலுவடையும்.

ஏரோ பாக்ஸிங் (Aero Boxing)

இடது காலை முன்புறம் வைத்து நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பிள்ஸை எடுத்து, கழுத்துப் பகுதியின் அருகே பிடிக்க வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரர் போட்டிக்கு தயாராக நிற்பது போன்ற நிலை இது. இப்போது, இடது கையை தோள்பட்டையோடு சேர்த்து வைத்துக்கொண்டு வலது கையை எதிரே ஒருவர் நிற்பது போல கற்பனை செய்துகொண்டு, அவரை நோக்கி நீட்ட வேண்டும். பிறகு, வலது கையை தோள்பட்டைக்கு அருகே கொண்டு வந்து, இடது கையை வலதுபுறம் முன்னே நீட்ட வேண்டும். இது ஒரு செட். பிறகு, வலது காலை முன்புறமாக அகட்டி வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். இப்படி, தலா 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

கைகளில் உள்ள தசை உறுதியாகிறது. தோள்பட்டை உறுதியாகும். முழு உடலுக்கு அசைவு ஏற்படுவதால், உடலின் நிலைத்தன்மை மேம்படும்.

புரோட்டின் உணவுகளை கொண்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம்

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவரா? எப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது? உடலுக்கு போதுமான அளவு சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள், உடல் எடையை குறைப்பது எளிதானதாகும்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக அளவு புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது சிறந்தது. குறைந்த அளவு கொழுப்பு கொண்ட புரோட்டின் உணவுகளை உண்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும். உடல் எடையை குறைக்க புரோட்டின் உணவுகள் எப்படி உதவுகிறது என இங்கு பார்க்கலாம்.

என்சைம்களை கட்டுப்படுத்துகிறது : அதிக புரத சத்து உணவுகளை உட்கொள்ளும் போது பசியின்மை குறைக்கப்படுகிறது. பசியை தூண்டும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றும் பல தேவையான ஹார்மோன்களை தூண்டுகிறது. எனவே நீங்கள் தானாகவே குறைந்த கலோரிகளை உட்க்கொள்ள முடிகிறது. பசி ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது புரோட்டீன் குறைகிறது. பசி மற்றும் இரவு உணவை குறைக்கிறது புரோட்டின் மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு நேர உணவை குறைவாக எடுத்துக்கொள்ள உதவுகிறது. அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வை குறைப்பதால், உடல் எடை குறைய வழி வகுக்கிறது. கலோரி கட்டுப்பாடு இல்லாமல் எடை இழக்கலாம்:

புரோட்டின் குறைவான கலோரி அளவுகளை எடுத்துக்கொள்ளவும், அதிகமான கலோரிகளை வெளியிடவும் பயன்படுகிறது. உயர் புரத உணவுகள் எடை இழப்புக்கு வழிவகுக்கின்றன. வேண்டுமென்றே கலோரிகளை கட்டுப்படுத்தாமல், கொழுப்புகள், கார்ப்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தி எடை இழப்பிற்கு காரணமாகின்றன. செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது :

உணவு சாப்பிட்ட பிறகு, உணவை செரிப்பதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் சில கலோரிகள் பயன்படுத்தப்படுகின்றன. புரதத்தின் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் போது சுமார் 20-30% புரத கலோரிகள் எரிக்கப்படுகின்றன. தூங்கும் போதும் புரோட்டின் கலோரிகளை எரிக்கிறது. உயர் தெர்மிக் விளைவு மற்றும் பல காரணிகள் காரணமாக, அதிக புரதம் உட்க்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனவே தூக்கத்தின் போதும் கூட அதிக கலோரிகளை எரிக்க முடியும். அதிக புரத உட்கொள்ளல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும்,

நாளொன்றுக்கு 80 முதல் 100 வரை கலோரிகளை எரிக்கவும் முடியும். பசியின்மையை குறைக்கிறது: புரதம் பசியின்மையை குறைக்கிறது. புரத உட்கொள்ளலை அதிகரிக்கும்போது, குறைவான கலோரிகளை சாப்பிட முடிகிறது. உயர் புரத உணவுகள் மிகவும் உறிஞ்சப்படுவதால், அவை குறைவான புரத உணவோடு ஒப்பிடும்போது பசியை குறைக்கின்றன. அதிக புரத உணவின் மூலம் கலோரிகளை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது, இது மிகவும் எடை இழக்க காரணமாக உள்ளது. வளர்சிதை மாற்றம் மற்றும் தசை இழப்பை குறைக்கிறது உயர் புரத உணவையும் உடல் பருமனைத் தடுக்கவும் முடியும். ஆனால்

இது ஒரு தற்காலிக மாற்றமாக இல்லாமல் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். குறிப்பு : அனைத்து வகை சிறுநீரக நோயாளிகளும் தங்களது புரதம் தேவைகள் குறித்து மருத்துவரிடம் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்

உடலை குறைக்க கடினமாக பயிற்சி செய்யலாமா

தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்து வரலாம்.

exercises-may-be-difficult-to-reduce-the-body
உடலை குறைக்க கடினமாக பயிற்சி செய்யலாமா?
உடற்பயிற்சியை முதன் முதலாக ஆரம்பிப்பவர்கள் எளிதான பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள் – ஒரு பலகையை 20 நொடிகள் பிடித்துக் கொண்டோ அல்லது 10 முறை க்ரன்ச் (Crunch) பயிற்சியையோ செய்து வாருங்கள். கடினமான பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைகளில் வலியும், காயங்களும் வீக்கங்களும் ஏற்படலாம்.

ஆகையால் பயிற்சிக்கு முன் ‘வார்ம் அப்’ செய்வது, உடலின் தசைகளில் காயங்கள் ஏற்படுவதை தடுக்கும். உதாரணமாக, சிறிது தூரம் விரைவாக நடப்பது, குனிந்து உங்கள் பாதங்களை மெதுவாக தொடுவது, மூச்சை இழுத்து விடுவது, இடுப்பை வளைத்து சில பயிற்சிகள் மெதுவாக செய்வது சிறந்ததாகும்.

இச்செயல்கள் உங்களை வயிற்று பயிற்சிக்கு தயார்படுத்தும். பயிற்சியின் போது தசைகள் மட்டும் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. உங்கள் மனமும் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் பயிற்சியின் தசைகள் மீது கவனம் செலுத்துங்கள். தசைகள் நகர்ந்து, விரிவடைவதையும் சுருங்குவதையும் உணருங்கள்.

இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். தட்டையான வயிற்றைப் பெற எல்லா பக்கங்களிலும் தசைகளை நகர்த்தி பயிற்சி செய்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம். க்ரன்ச் பயிற்சியில் மட்டும் கவனம் செய்யாதீர்கள். வக்ராசனா போன்று உடம்பை வளைக்கும் மற்றும் திரும்பும் விதமான பயிற்சிகளையும் செய்யலாம்.

உங்கள் வழக்கான பயிற்சியில் சில பாலன்ஸ் செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒற்றை காலில் நின்று மற்றொரு காலை தொடையின் மீது வைத்துக் கொள்வது, கைகளை தலைக்கு மேல் வைத்து உள்ளங்கைகளை தொடும் வண்ணம் வைத்துக் கொள்வது என ‘விரிக்காசனா’ போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.

வயிற்று பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்வதால் பலன் பெற முடியாது. ஓய்வு எடுப்பதால் தசைகள் மீண்டு மேலும் உறுதியடையும். அவசர அவசரமாக பயிற்சி செய்தால் பலன் பெற முடியாது. மெதுவாகவும், நிதானத்துடனும் பயிற்சி செய்தால் சிறந்த முறையில் கொழுப்பை குறைக்கலாம்.

உங்களின் வயிற்று தசைகள் அதிக எடைகளை தூக்குவதால் சிறந்த பலனைப் பெறும். ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் போதும், எடைகளை ஒரு சில கிலோ ஏற்றி பயிற்சி செய்வதால், இன்னும் நல்ல பலனை அடையலாம். ஜிம்மிற்கு தினம் சென்று கடினமான பயிற்சி செய்வதால் மட்டுமே போதாது.