Archive for the ‘செஸ்ட்’ Category

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும ஸ்டேட்டிக் லங்கீஸ் பயிற்சி

தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்கள் குறிப்பாக தொடை, இடுப்பு, பின்பக்கம் போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதையால் அவதிப்படுவதோடு பார்க்கவும் அசிங்கமான தோற்றத்தை அளிக்கின்றனர்.

இவர்கள் தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

hhhஇப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

பயன்கள் :

முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.

தசைகளை வலுவடையச் செய்யும் ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்

உடல் எடையை குறைப்பதில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன. இந்த ஏரோபிக்ஸை ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் வந்துள்ளன.

fc9e6760-6584-41c8-a84a-d28dfb1b1e79_S_secvpfபள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான். ஒருவர் மீது ஒருவர் யானை, ஒட்டகம், தேர், கார் என்று பல வடிவங்களில் இசைக்கும் நேரத்தில் அமைத்து காண்போர் கண்களை ஆச்சரியத்தில் விரியச்செய்யும் கணகவர் காட்சியமைப்புகளுடன் ஏரோபிக்ஸ் விளையாட்டுப் பிரிவில் நுழைந்துள்ளது எனலாம். ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம்.

முக்கியமாக இதய தசைகளை வலுவடையச் செய்கின்றன. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உடலின் சக்தி அதிகரிக்கிறது. மனச்சோர்வு குறைகிறது. சர்க்கரை நோயாளிகள் ஏரோபிக்ஸ் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அதுமட்டுமல்ல. தாம்பத்திய உறவையும் பலப்படுத்துகிறதாம்.

கைகள், தோள்களுக்கு வலிமை தரும் மாடிஃபைடு புஷ் அப்ஸ் பயிற்சி

ஃபிட்டாக இருக்க ஜிம் செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே ஒவ்வொரு பகுதிக்கான எளிய பயிற்சிகள் செய்வதன்மூலம் ஃபிட்டான உடல் அமைப்பைப் பெற முடியும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்துவிட்டு, தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

முழு உடலுக்கான பயிற்சியின் முதல் பகுதியாக, மேல் பாகத்துக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதைச் செய்துவந்தால், மூன்றே மாதத்தில் அழகான ஃபிட்டான தோள், வயிறு, இடுப்புப் பகுதிகள் நிச்சயம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பு, வார்ம்அப் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முடித்த பிறகு, கூல்டவுன் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முறைகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகள் செய்வது நல்லது.

9e5cecaf-f60b-47fd-a229-81eee7f726ef_S_secvpfமாடிஃபைடு புஷ் அப்ஸ் (Modified push ups) :

தரையில் முட்டிபோட்டு, கைகள் நேராகத் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். பாதங்களை சற்று தூக்கி, ஒரு பாதத்தின் மேல் மற்றொரு பாதம் வைத்து, முழு உடலையும் தரைப் பகுதி வரை படத்தில் உள்ளபடி இறக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது.

பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 20 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். ஆண்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பயிற்சியை செய்யலாம்.

பலன்கள்: நெஞ்சு, மேல் வயிறு, கை பகுதி மற்றும் உள் தசைகள் (கோர் மசில்) உறுதியாகும்.

உடல் எடையை குறைக்க உதவும் 4 ஏரோபிக்ஸ் பயிற்சிகள்

உடல் எடையை குறைப்பதில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன. இந்த ஏரோபிக்ஸ் பயிற்சிகளில் 4 வகைகள் உள்ளன. அவை… டான்ஸ் ஏரோபிகஸ், ஸ்டெப்ஸ் ஏரோபிகஸ், நீர் ஏரோபிக்ஸ், ஸ்போட்ஸ் (விளையாட்டு) ஏரோபிக்ஸ் என்று பலவகைப்படும்.

ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ் :

ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ் பெருமளவு கலோரிகளை எரிக்கவும், நேர்த்தியான உடல் அமைப்பிற்கும் தசைகளை வலுவூட்டவும் உதவுகிறது. இசையுடன் காலடி வைத்து செய்யும் உடற்பயிற்சி. பயிற்சியாளரின் உடல்வாகு, வேகத்தின் அடிப்படையில் நிமிடத்திற்கு 125 முதல் 140 அடிகள் வைத்து பயிற்சி செய்யும் அளவில் இசையோடு தாளம் இணைக்கப்பட்டிருக்கும்.

டான்ஸ் ஏரோபிக்ஸ் :

டான்ஸ் ஏரோபிக்ஸ் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேற்கொள்வதால் அழகிய உடல் தோற்றமும், முகவசீகரமும், மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஒர் மகிழ்ச்சியான அனுபவத்தின் வழியாக கிட்டுகின்றன. உரிய பயிற்சியாளரிடம் இப்பயிற்சியை மேற்கொண்டாலும் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னே இப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

நீர் ஏரோபிக்ஸ் :

மார்பு வரையும் அல்லது கழுத்து வரையும் நீரில் நின்று கொண்டு செய்யும் நீர் ஏரோபிக்ஸ் குறைந்த அளவு கலோரிகளை எரித்தாலும் இதய நோயில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கிறது.. நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி புரிகின்றன. இதனால் நாம் தினசரி வேலைகளைச் செய்யும்போது கூட உடல் உஷ்ணமடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

fc9e6760-6584-41c8-a84a-d28dfb1b1e79_S_secvpfஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் :

இந்த ஏரோபிக்ஸை ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் வந்துள்ளன. பள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான்.

ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம். முக்கியமாக இதய தசைகளை வலுவடையச் செய்கின்றன. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உடலின் சக்தி அதிகரிக்கிறது. மனச்சோர்வு குறைகிறது. சர்க்கரை நோயாளிகள் ஏரோபிக்ஸ் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அதுமட்டுமல்ல. தாம்பத்திய உறவையும் பலப்படுத்துகிறதாம்.

தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

தினசரி நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வு பெற இயலும். நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறலாம். அதனால் தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும்.

உடற்பயிற்சி தினசரி செய்வதன் மூலம் நமது வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடலும் மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் தினமும் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள்.

gஉடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பு கரைந்து நமது தசைகள் வலுப்பெறுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்துக்களையும் சரி செய்கிறது. உடற்பயிற்சி செய்வதன் காரணமாக மூளையில் புதிய செல்கள் வளர தூண்டுகிறது.

இதன் மூலம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது. பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும்.

உடலில் தங்கி கொழுப்பாக மாறும் தேவையற்ற கலோரிகளை உடற்பயிற்சி செய்வதின் மூலம் எரிக்க இயலும். இதனால் உடல்நலம் ஆரோக்கியமடையும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் நமது உடல் பன்மடங்கு ஆரோக்கியம் அடையும்.

ஆண்களின் மார்பு பகுதியை கவர்ச்சியாக மாற்றும் உடற்பயிற்சி

சின்-அப்ஸ் :   

சற்றே உயர்-நிலை உடற்பயிற்சிகளில் ஒன்றான சின்-அப் பயிற்சியை செய்வது கனமான உடல்வாகு கொண்ட மனிதர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், இது உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுடன், கட்டுக்கோப்பாகவும் வைக்கும். இந்த பயிற்சியை செய்யும் போது மற்றவர்களின் உதவியை நீங்கள் நாடலாம்.21143963-d143-4db5-add5-3a715ce4ee0e_S_secvpf

ஒரு உதவியாளர் இருந்தால் அவர் உங்களுடைய முழங்காலை தூக்கிக் கொள்ளச் செய்யலாம். உங்களுடைய கைகள் உடல் எடையைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு வலிமை பெற்ற பின்னர், இந்த பயிற்சியை நீங்கள் பிறர் உதவியின்றி செய்யலாம்.   

டம்பெல் ப்ளைஸ் : 

உங்களுடைய மார்புகளுக்கு ஆண்மைத்தனமான வடிவத்தை அளிக்கும் மற்றுமொரு உடற்பயிற்சியாக டம்பெல் உள்ளது. இந்த பயிற்சி உங்களுடைய மார்பின் அகலத்தை அதிகப்படுத்தி, அதை கவர்ச்சியான அம்சமாக்கி விடும். ஒரு டேபிள் மற்றும் டம்பெல்-ஐ வைத்து இந்த பயிற்சியை செய்யலாம் அல்லது உங்களுடைய பேலன்ஸ் தவறாமல் எடையுள்ள பொருள்களை தூக்கலாம்.

ஆண்களுக்கான சிறந்த உடற்பயிற்சி முறைகள்

எல்லா ஆண்களும் தன் மார்பு விரிந்த நிமிர்ந்து இருப்பதையே விரும்புவர். பெண்களும் அப்படித்தான் என சொல்லி தெரிவதில்லை. இதற்கு வீட்டிலேயே சிறந்த முறையில் பயிற்சி செய்யலாம்.excercise

முதலில் தரையில் குப்புற படுத்த நிலையில் இரு கைகளையும் ஊன்றி நின்று கொள்ள வேண்டும்.இரு கைகளும் சம தொலைவில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதே நேரம் கால்கள் மடக்காமல் இருக்க வேண்டும். அப்படியே உடம்பை தரையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

பின் அப்படியே மேல் நோக்கி எழ வேண்டும்..இதை, முதலில் 10 இல் இருந்து 30 வரை செய்து பின்னர் எண்ணிகையை கூட்டிகொள்ளலாம். முதலில் இந்த பயிற்சி செய்யும் போது கடினமாக இருக்கும்.

நன்கு பழகிய பின்னர் மிகவும் எளிமையானது.இப்பயிற்சி செய்வதால் தோள்பட்டை, கைகள் வலிமை பெறுவதுடன் மார்பும் விரிவடையும். ஆனால் இதை கவனமாக கையாள வேண்டும். அவசரமாக செய்தாலோ, தவறாக செய்தாலோ கழுத்து பகுதியில் தசைபிடிப்பு வர வாய்ப்புண்டு.

இன்னும் ஒரு பயிற்சியில் தரையில் முதுகு நன்கு படும்படி படுத்துக்கொண்டு தலையை லேசாக தூக்கி கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் மடக்கி தரையில் ஊன்றி கொள்ள வேண்டும்.

பின்னர் கால்களை அப்படியே வைத்துகொண்டு தலையை மட்டும் முழங்காலை நோக்கி கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் போது முதுகு வளையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இது முதுகு வலி உள்ளவர்களுக்கு சிறந்த பயிற்சியாகும்.

கண்களுக்கான உடற்பயிற்சி முறைகள்

கண்களை ஆரோக்கியமாக வைத்து, களைப்புகளை நீக்க உடற்பயிற்சி மிக அவசியம்.

கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய முறைகள்:

1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை மூடிகொள்ளவும்.

அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.

2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.

3. குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள் மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5. அமைதியாக உட்கார்ந்து பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வளஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.

7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.

8. எதிரில் உள்ள சுவர் மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.

9. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கணனி முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.

எந்த பக்கம் வாக்கிங் போனால் உடலுக்கு நல்லது?

மைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், வாக்கிங் போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், வாக்கிங் போனாலே போதும். 586c9e83-420e-4d7b-aea0-20787eb13ca7_S_secvpf

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன. நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, வாக்கிங் எனப்படும் நடைப்பயிற்சி. 

தினமும், வாக்கிங் செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், இன்சுலின் சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது. 

தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்சனை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. 

உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. வாக்கிங் செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது.

நடைப்பயிற்சியால் உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை. எலும்புகளின் வலிமைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்று, உடலுக்கு தர தேவையான, வைட்டமின் டி நடைப்பயிற்சியின்போது, நம் மீது விழும் சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கிறது.

பெண்களுக்கு வரும் பேறுகால நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஆகியவற்றை, நடைப்பயிற்சி வராமல் தடுப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், வாக்கிங் போக வேண்டும். நடைப்பயிற்சியின்போது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப, காலணிகளை அணியலாம்.

 

பெண்களுக்கு முத்தான 3 உடற்பயிற்சி

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும். ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்களை பெற முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!

பயிற்சி1

ஓரடி அகலம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 2

முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 3

முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும். ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.