கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்

பெண்கள் உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம்.

கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்
பெண்களின் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது. பெண்களின் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

புஷ் அப்ஸ் (Push Ups)

 

women-pushups

கைகளுக்கான உடற்பயிற்சியில் முக்கியமானதாக விளங்குகிறது புஷ் அப்ஸ். நன்றாக அழுத்தி புஷ் அப் செய்து கைகளுக்கு அழுத்தத்தை கொடுங்கள். அதற்கு முதலில் தட்டையான இருக்கையில் முட்டி தரையில் படும் படி படுங்கள். கீழே நோக்கிய நிலையில் இருக்கும் போது, உங்களின் முழு எடையையும் முட்டி மற்றும் கைகளில் ஏத்திடுங்கள். நல்ல பயனை பெற தினமும் 15 முதல் 20 புஷ் அப் வரை எடுங்கள். இது நெஞ்சு மற்றும் கைகளில் உள்ள தசைகளை திடமாக்கி வலுவடையச் செய்யும்.

ட்ரைசெப்ஸ் டிப்ஸ் (Triceps Dips)

women-triceps-dipsகைகளின் பின்புறம் வலுவடைய ட்ரைசெப்ஸ் டிப்ஸ் முறையை கையாளலாம். நாற்காலியின் நுனியில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி, உங்கள் கால்களை நாற்காலியில் இருந்து சற்று தள்ளி தரையில் படும் படி நீட்டிக் கொள்ளுங்கள். கால்களை நேராக நீட்டி நாற்காலியை விட்டு விலகி வைத்து, உடலின் மொத்த எடையையும் கைகளில் ஏத்திடுங்கள்.

பின் மெதுவாக உடலை நேராக இறக்கி முழங்கை 90 டிகிரி திரும்பும்படி செய்யுங்கள். இப்போது கைகளின் பின்புற தசைகளை அழுத்தி, மீண்டும் உடலை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள். முதலில் பாதங்களை தரையில் நேராக வைத்து, முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ப்ராக்டிஸ் செய்து உடலின் மேல் பகுதிக்கு வலு சேர்க்கும் போது, கால்களை விரித்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்யலாம்.

ட்ரைசெப்ஸ் பிரஸ் (Triceps Press)

women-tricepts-pressஇதனை ஆரம்பிக்க நாற்காலியில் அமரலாம் அல்லது நின்று கொள்ளலாம். உங்கள் முதுகை நேராக வைத்து கொண்டு 3-5 பவுண்ட் எடை உள்ள ஒரு கர்லாக்கட்டையை (டம்ப் பெல்) தலையின் மேல் தூக்குங்கள். இப்போது முழங்கையை மடித்து எடை அனைத்தும் தலையின் பின்பக்கம் செல்லுமாறு செய்யுங்கள். இதன் பின் முழங்கையை நேராக்கி ஆரம்பித்த நிலைக்கு மீண்டும் செல்லுங்கள். இதனை ஆரம்பத்தில் 15 முதல் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

ட்ரைசெப்ஸ் கிக் பேக் (Triceps Kickback)

women-hand-exerciseஇந்த உடற்பயிற்சி கைகளின் பின்புறத்தை வலுவடைய செய்யும். இந்த பயிற்சியில் இடுப்பு வரை வளைந்து தொடங்க வேண்டும். அப்படி செய்யும் போது உடலின் எடையை தாங்க, ஒரு கையை நேராக நீட்டி ஒரு நாற்காலி, மேஜை அல்லது சோபா மீது வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு கையில் டம்ப் பெல் ஒன்றை பிடித்து கொண்டு, உங்கள் முழங்கை 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ட்ரைசெப்ஸ் தசைகளை இறுக்கி, கைகளை நேராக்க டம்ப் பெல்லை பின்புறம் கொண்டு சென்று, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு கொண்டு வாருங்கள்.

கைகளுக்கு வலிமை தரும் பைசெப்ஸ் கர்ல்ஸ் பயிற்சி

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சிறந்த வழி உடற்பயிற்சி தான். ஒருவரின் உடல்வாகு படி உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம் பல உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம்.

ஆனால் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித்தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது. நம் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள் கிடைப்பதில்லை.

9aca62c7-bd50-4922-bc9b-11088f7453bf_S_secvpfஉடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். கைகளுக்கு நல்ல வலிமை தர பைசெப்ஸ் கர்ல்ஸ் Biceps Curls பயிற்சி மிகவும் சிறந்தது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நின்று கொள்ளவும்.

பின்னர் இரண்டு கைகளிலும் டம்ப் பெல்ஸை எடுத்துக் கொண்டு, நின்ற நிலையில் இந்த பயிற்சியை தொடங்க வேண்டும். உங்கள் உடலை நேராக வைத்துக் கொண்டு உள்ளங்கையை மேல் நோக்கி நீட்ட வேண்டும். பின் மெதுவாக முழங்கையை மடித்து, கைகளை மெதுவாக சுழற்ற வேண்டும். இப்படி செய்வதால் கைகளில் உள்ள பைசெப்ஸ் தசை பிதுங்கி நிற்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் போது, முழங்கைகள் உடலின் பக்கவாட்டில் ஒட்டியும் வைக்க வேண்டும். இந்த நிலையை ஒரு நொடிக்கு வைத்திருந்து, பின் மெதுவாக எடையை கீழிறக்கி ஆரம்பித்த நிலைக்கு திரும்புங்கள்.

இவ்வாறு ஆரம்பத்தில் 15 முதல் 20 முறையும் பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து அதற்கு மேலும் செய்யலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் கைகளிலும், தோள்பட்டையிலும் வலி இருக்கும். பின்னர் படிப்படியாக சரியாகிவிடும்.

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம். fc53495c-5723-4201-b0b3-4e57243ebba7_S_secvpf

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் 3 அடி அகலம் விட்டு நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை படத்தில் உள்ளபடி பிடித்து கொண்டு கால்களின் முன்பாதம் மட்டும் தரையில் படும்படி படம் 1-ல் உள்ளபடி நிற்கவும். 

பின்னர் முட்டிவரை கால்களை மடக்கி (சேரில் உட்காருவதை போல் ) உட்காரும் நிலையில் இருக்கவும். ஆனால் முன்கால் பாதங்கள் மட்டுமே தரையில் பட (படம் 2-ல் உள்ளபடி) வேண்டும். 

இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். தினமும் இருவேளை இந்த பயிற்சியை செய்து வந்தால் கால்வலி படிப்படியாக சரியாகும்.

உடற்பயிற்சியை தீவிரமாக செய்ய வேண்டுமா?

6 மாதங்களுக்கு தொடர்ந்து தினமும் ஒரே வகையான பயிற்சியில் நீங்கள் ஈடுபட்டு வந்தால், அவ்வகை பயிற்சிகளுக்கு ஏற்ப உங்கள் தசைகள் பழகிக் கொள்ளும். எனவே தினமும் ஒரே வகையான பயிற்சியை 4-6 வாரங்களுக்கு தினமும் செய்திடுங்கள். அதன் பின் வேறு ஒரு பயிற்சிக்கு மாறுங்கள். உடற்பயிற்சி செய்யும் எண்ணிக்கை, உடற்பயிற்சி வகை, அல்லது பயன்படுத்தும் எடையின் வகை என எதை வேண்டுமானாலும் மாற்றுங்கள்.3ce619c5-f26e-4f86-9b16-74a02167e5b3_S_secvpf

உடற்பயிற்சி செய்யும் போது தீவிரமாக செய்ய வேண்டும். இதனால் பயிற்சியை முடிக்கும் போது மிச்ச மீதி ஆற்றல் திறன் என எதுவும் இருக்க கூடாது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது 80-100% தீவிரத்தை அதில் காட்ட வேண்டும். உங்கள் உடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்து முடித்தாலே போதும், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தமாகும். 

நீங்கள் வீட்டில் பயிற்சி செய்பவராக இருந்தால் அந்தளவு பயிற்சியில் நீங்கள் ஈடுபடாமல் இருக்கலாம். அப்படியானால் நீங்கள் ஏன் உங்கள் சூழலை மாற்றக் கூடாது? ஒழுங்காக பயிற்சியில் ஈடுபட வேண்டுமானால் வகுப்புக்கு செல்லுங்கள் அல்லது ஜிம்மிற்கு செல்லுங்கள் அல்லது ஒரு பயிற்சியாளரின் உதவியுடன் செயல்படுங்கள். 

ஒவ்வொரு உடற்பயிற்சியின் போதும், பளுவின் அளவை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். அதேப்போல் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்; உதாரணத்திற்கு, “3 வாரத்தில் பெஞ்ச் ப்ரெஸ்ஸை 5 பவுண்ட் அதிகரிப்பது”. இவ்வகையான சின்ன சின்ன இலக்கு உங்களை கிடைக்க போகும் பலனின் மீது கவனத்துடன் இருக்க வைக்கும். இதனால் வேகமாக திடமாக மாறலாம். 

தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பது முக்கியம் தான். ஆனால் அதே அளவில் தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதும் மிகவும் முக்கியமாகும். ஒரே தசைகளுக்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு வேலை கொடுக்க கூடாது. தசை வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமாகும். உங்கள் தசைகளுக்கு குறைந்தது 48 மணிநேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும்.. அதனால் புதிய தசை நார்கள் வளர்ச்சியடையும். மேலும் நன்றாக சாப்பிடவும் வேண்டும். காரணம், தசை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தும் ரொம்ப முக்கியமாகும். 

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் இடையே 30-45 நொடி இடைவெளி மட்டுமே வழங்க வேண்டும். நீண்ட நேரம் ஓய்வெடுக்காதீர்கள். 

எடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்

எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம்.  பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. 9fb7cc56-c621-4f12-8041-48864803f2d6_S_secvpf

தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். 

• ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும். 

• நீங்கள் நினைப்பதை விட, இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகள் காலப்போக்கில் அதிக தீமையை விளைவிக்கலாம். இது தசைகளை வேகமாக வளர்க்க உதவினாலும், தசைகளில் புண்களை ஏற்படுத்தும். 

• தசைகளை வளர்க்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, கார்டியோ உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வது உங்கள் இலட்சியத்தை அடைய விடாது. அளவுக்கு அதிகமான கார்டியோ உடற்பயிற்சிகள் எடை தூக்கும் பயிற்சியில் நன்மைகளுக்கு முட்டுக் கட்டையாக விளங்கும். 

ஒரே நேரத்தில் கொழுப்பையும் எரித்து, தசைகளையும் வளர்க்க முடியாது. இருப்பினும் கார்டியோ உடற்பயிற்சிகளால், உங்கள் தசைகளை தான் வார்ம் அப் செய்கிறீர்கள். இதனால் சற்று கொழுப்பும் குறைகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசைகளை திறம்பட செயல்பட வைக்கும். 

• பலன் பெறுவதை துரிதப்படுத்த இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஸ்டீராய்டுகளால் ஏற்படும் தீமைகள் பல – டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும், சீக்கிரமே வயசானவர் போன்று காணப்படுவீர்கள், ஆண்களுக்கு மார்பகங்கள் உண்டாகும். 

• பளு தூக்கும் போது தவறி போட்டு ஒவ்வொரு வருடமும் சிலர் இறக்கின்றனர். பெஞ்ச் ப்ரெஸ் செய்யும் போது பிறரின் உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும். மேலும் ஆரம்ப கட்ட பயிற்சியின் போது அதிக எடை உள்ள பளுவை தூக்காதீர்கள்.

குறைந்த நேர உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்

உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரித்து தசைகளை வலுவுறச் செய்வதில் சிறந்து செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. 2a6cefe4-8033-4519-a683-fd87f748ed75_S_secvpf

நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில், உங்களுக்கு பயனை அளிக்கும் 15 நிமிட தீவிரமான இடைவெளி பயிற்சியில் கூட ஈடுபடலாம். ட்ரெட்மில், குந்துகைகள், லங்ஸ் மற்றும் பர்பீஸ் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடிக்காத உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்தால் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படாது. 

நல்லதொரு வியர்வை சிந்தும் நேரத்தை செலவிட பல வழிகள் உள்ளது. அதனால் உங்களுக்கு பிடித்தவைகளை தேர்ந்தெடுங்கள். அவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவைகளைப் பற்றி கற்றுக்கொண்டு அதனை அனுபவிக்க தொடங்குங்கள். ஸூம்பா வகுப்பு, ஸ்பின் வகுப்பு, குத்துச்சண்டை போன்றவைகளை முயற்சி செய்து பார்க்கலாம். 

நீங்கள் செய்வதை விரும்பி செய்தால், அதனை தொடர்ந்து செய்வீர்கள். அதனால் அதிக பயனையும் பெறுவீர்கள். தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், தரையில் படுத்துககொண்டு டி.வி பார்க்கும்போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். 

இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும். வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க எளியவகை உடற்பயிற்சிகளை மட்டும் செய்தாலேபோதும்.

இந்த எளிய பயிற்சி செய்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறையும்

உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார் கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.சிலரோ தினமும் காலையில் எழுந்தது ம் வாக்கிங், ஜாக்கிங் போன்ற வற்றையாவது தொட ர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். உடற்பயிற்சி கூடங்களுக் கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல் லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை பின் பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.images

அனைத்துவீடுகளிலும், அலுவலகத்திலும்மாடிகள்இருக்கும். அப்போதுமேலேசெல்வதற்கு, லிப்ட்டுகளைபயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின்மூலம்செல்லலாம். இதுவும்உடல்எடையைக்குறைப்பதற்கானஒருவழியானஉடற்பயிற்சிதான்.

தொப்பையைக்குறைப்பதற்குஒருசிறந்தஉடற்பயிற்சிஎன்றால்,முதலில்தரையில்படுத்துக்கொண்டு, கைகளைதலைக்குபின்னால்பிடித்துக்கொண்டு, மெதுவாகமுன்னால்எழவேண்டும். அப்போதுகால்களையும்முன்னோக்கிதூக்கவேண்டும். இவ்வாறுதொடர்ந்துசெய்தால், வயிற்றில்உள்ளதேவையற்றகொழுப்புக்கள்கரையும், உடல்எடையும்படிப்படியாககுறையும்.

வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கு ம் போது, 

தரையில்குப்புறபடுத்துக்கொண்டு, கைகள்இரண்டையும்தரையில்பதித்து , கால்கட்டைவிரல்கள்இரண்டையும்தரையில்ஊன்றிபோலன்ஸ்செய்துஉடலைமேலேதூக்கிக்கொண்டு, பின்மெதுவாகமுன்புறமாகமூக்குதரையில்தொட்டுபடிகுனிந்து, பின்மீண்டும்உடலேமேலேதூக்கவேண்டும். இவ்வாறுதொடர்ந்துசெய்துவந்தால், கைகள்மற்றும்மார்புகள்நன்குவலிமைபெறும்..

ஜாக்கிங்என்றுசொன்னதும்வெளியேதான்செல்லவேண்டும்அல்லதுஉடற்பயிற்சிஇயந்திரங்கள்மூலம்தான்செய்யவேண்டும்என்பதில்லை. வீட்டில்டிவிபார்த்துக்கொண்டே, ஒரேஇடத்தில்நின்றுகொண்டேஜாக்கிங்செய்யலாம்.

இதுவும்ஒருசிறுவயதுவிளையாட்டுதான். இதற்குவெறும்கயிறுமட்டும்போதுமானது. ஆகவேவீட்டில்ஸ்கிப்பிங்கயிறுஇருந்தால், அதனைநேரம்கிடைக்கும்போது, தோட்டம்அல்லதுமாடியில்விளையாடலாம்.

டேபிள்அல்லதுகட்டிலில்கைகளைஊற்றி, முன்னும்பின்னும்எழவேண்டும். மற்றொன்று, கால்களைடேபிளின்மேல்வைத்துக்கொண்டு, கைகளைதரையில்வைத்துக்கொண்டு, மேலும்கீழம்எழவேண்டும். இவ்வாறுசிறுபயிற்சிகளைசெய்துவந்தால்உடல்எடைபடிப்படியாககுறைவதைகாணலாம்.
 

 

 
 

 

 

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்

தொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.
இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும்,எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

 

ஆண்களுக்கு மேல் வயிற்று பகுதியை வலிமையாக்கும் பயிற்சி

இந்த பயிற்சி மேல் வயிற்று பகுதியில் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும், வயிற்று பகுதிக்கு வலிமை தரவும் கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கால்களை 3 அடி அகலமாக வைத்துக் கொள்ளவும். a2331264-d03d-4810-be70-7c65911aa748_S_secvpf

வலது கையை படத்தில் உள்ளபடி வலது காதை தொட்டபடி வைத்துக் கொள்ளவும். இடது கையை நேராக மேல் நோக்கி தூக்கிக் கொண்டு அப்படியே முன்பக்கமாக எழுந்து இடது கையால் வலது கால் பெருவிரலை தொடவும். பின்னர் படுத்து கொள்ளவும். 

கையை மாற்றி இடது கையால் இடது காதை தொடவும். அடுத்து கைகயை மாற்றி வலது கையை மேல் நோக்கு தூக்கிக்கொண்டு முன்பக்கமாக எழுந்து வலது கையால் இடது கால் பெருவிரலை தொட வேண்டும். இவ்வாறு வேகமாக கைகயை மாற்றி மாற்றி செய்ய 30 முறை செய்ய வேண்டும். 

ஆரம்பத்தில் 30 முறை செய்தால் போதுமானது. படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனை தரக்கூடியது.

வயிறு மற்றும் உடல் எடை குறைய வழி

1.இருதயத்தை வேகமாக இயங்க செய்யும் பயிற்சி
2. அதிகாலையில் மூச்சு பயிற்சி
3.திட்டமிட்ட சரிவிகித உணவு
4.நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 
5. சர்க்கரையை தவிர்க்க வேண்டும்
6. ஒரு நாளைக்கு குறைந்த  அளவிலான சாப்பாடு 6 அல்லது 7  முறை   சாப்பிட வேண்டும்
7. கூட்டு  கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்
8. நல்ல கொழுப்புகள் இருக்கும்  உணவை சாப்பிட வேண்டும்
9. புரோட்டீன் நிறைந்த  காய்கறிகள்  மற்றும் இறைச்சி சாப்பிட வேண்டும்
10. சரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
11. நார்சத்து அதிகம் உள்ள பழங்களை  சாப்பிட வேண்டும்
12. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்
13. உடல்பயிற்சி  செய்ய வேண்டும்
14. வருத்த மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது
15. நாளைக்கு ஒரு முறையாவது  கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.
16. அதிகாலையில் சுடு தண்ணீரும், பகலில் குளிர்ந்த தண்ணீரும் குடிக்க வேண்டும்
17. உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
18. தேங்காய், கடலை,பாமாயில் போன்ற எண்ணையில் செய்த உணவை சாப்பிட கூடாது