வீட்டில் செய்யக்கூடிய தொப்பையை குறைக்கும் பயிற்சிகள்

தொப்பையைக் குறைக்க உணவுகளுக்கு அடுத்தபடியாக உதவுவது உடற்பயிற்சி தான். எனவே தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகளுடன், தினமும் உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம்.

அதிலும் உங்களுக்கு ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? எந்த ஒரு கருவிகளின் உதவியும் இல்லாமல் ஈஸியான உடற்பயிற்சியின் மூலமே தொப்பையைக் குறைக்கலாம். வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகளை பார்க்கலாம். உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகளானது கரைக்கப்பட்டு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி தான் அவசியம் என்பதில்லை. தினமும் எளிய உடற்பயிற்சியான ரன்னிங்/வாக்கிங்கை மேற்கொண்டாலே, கொழுப்பை கரைக்கலாம். ஆனால் ரன்னிங்/வாக்கிங் மேற்கொள்ளும் போது, நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகரிப்பதுடன், உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் வாம்ப் அப் செய்து உடலை ரிலாக்ஸ் செய்ய மறக்க வேண்டாம்.

22உங்களால் உடற்பயிற்சி இயந்திரங்களை வாங்க முடிந்தால், நீள் பயிற்சி கருவியை வாங்கி தினமும் உடற்பயிற்சி செய்து வாருங்கள். இந்த உடற்பயிற்சி இயந்திரம் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இந்த இயந்திரத்தில் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், 300 கலோரிகளை கரைக்கலாம்.

உங்கள் வீட்டில் சைக்கிள் இருந்தால், தினமும் அதிகாலையில் சிறிது தூரம் சைக்கிளில் வெளியே பயணம் செய்யுங்கள். ஏனெனில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், கால்கள் வலிமையடைவதுடன், குனிந்தவாறு ஓட்டுவதால் வயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

அறிந்து கொள்ள வேண்டிய ஃபிட்னெஸ் டிப்ஸ்

* வயிறு முட்ட சாப்பிட்டால் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிறகு, 20 நிமிடங்கள் கழித்துப் பயிற்சி செய்யலாம்..

* நன்றாக பயிற்சி செய்தால் நன்றாகப் பசிக்கும், சத்தான உணவுகளைச் சாப்பிட்டால், உடல் அதை கிரகித்துக் கொள்ளும். உடல்

எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மன அழுத்தம் வராது. எந்த வேலையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் வளரும்.

பெண்களுக்கு உடலை இந்த வயதிலிருந்தே ஆரோக்கியமாக வைத்திருந்தால், திருமணத்துக்குப் பின் சிசேரியன் தவிர்த்து சுகப்

பிரசவம் சாத்தியமாகும்.

* வொர்க்அவுட் செய்யும் ஆர்வத்தில் அதிகப்படியாகவும் செய்துவிடக் கூடாது. அது தசைப் பிரச்சனை, உடல் வலி

போன்றவற்றுக்குக் காரணமாகிவிடும்.

* வயதான காலத்தில் உடல் பேலன்ஸ் இழந்து தடுமாறும். இந்த வயதில் பயிற்சிகளை செய்துவந்தால், தெம்பாக இருக்கலாம்.

11* 24 மணி நேரத்தில் எந்த நேரமும் பயிற்சிகளை செய்யலாம்.

* எடை குறைய வேண்டும் என்று நினைத்துப் பயிற்சி செய்பவர்களுக்கு, காலை நேரமே உகந்தது.

* வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது, கொழுப்பு நன்றாக கரையும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தவறு, பயிற்சிக்கு முன்பு

பழங்கள் அல்லது சிறிது அளவு சிற்றுண்டி உட்கொள்வது நல்லது.

* தினம் பயிற்சி செய்தால், ஒரு மாதத்தில் அரை கிலோவைக் குறைக்கலாம்.

தோள்பட்டை, கைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி

ஃபிட்டாக இருக்க ஜிம் செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே ஒவ்வொரு பகுதிக்கான எளிய பயிற்சிகள் செய்வதன்மூலம் ஃபிட்டான உடல் அமைப்பைப் பெற முடியும்.

11உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்துவிட்டு, தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். முழு உடலுக்கான பயிற்சியின் முதல் பகுதியாக, மேல் பாகத்துக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதைச் செய்துவந்தால், மூன்றே மாதத்தில் அழகான ஃபிட்டான தோள், வயிறு, இடுப்புப் பகுதிகள் நிச்சயம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பு, வார்ம்அப் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முடித்த பிறகு, கூல்டவுன் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முறைகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகள் செய்வது நல்லது.

மாடிஃபைடு புஷ் அப்ஸ் (Modified push ups) :

22தரையில் முட்டிபோட்டு, கைகள் நேராகத் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். பாதங்களை சற்று தூக்கி, ஒரு பாதத்தின் மேல் மற்றொரு பாதம் வைத்து, முழு உடலையும் தரைப் பகுதி வரை இறக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 15 முறை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்தும் கொள்ளலாம். பெண்கள் ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. ஆனால் அவர்களால் முடிந்த அளவில் செய்யலாம். இந்த பயிற்சியை செய்வதால் நெஞ்சு, மேல் வயிறு, கை பகுதி மற்றும் உள் தசைகள் (கோர் மசில்) உறுதியாகும்.

கைகளுக்கு வலிமை தரும் பைசெப்ஸ் கர்ல்ஸ் பயிற்சி

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சிறந்த வழி உடற்பயிற்சி தான். ஒருவரின் உடல்வாகு படி உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம் பல உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம்.

ஆனால் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித்தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது. நம் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள் கிடைப்பதில்லை.

9aca62c7-bd50-4922-bc9b-11088f7453bf_S_secvpfஉடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். கைகளுக்கு நல்ல வலிமை தர பைசெப்ஸ் கர்ல்ஸ் Biceps Curls பயிற்சி மிகவும் சிறந்தது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நின்று கொள்ளவும்.

பின்னர் இரண்டு கைகளிலும் டம்ப் பெல்ஸை எடுத்துக் கொண்டு, நின்ற நிலையில் இந்த பயிற்சியை தொடங்க வேண்டும். உங்கள் உடலை நேராக வைத்துக் கொண்டு உள்ளங்கையை மேல் நோக்கி நீட்ட வேண்டும். பின் மெதுவாக முழங்கையை மடித்து, கைகளை மெதுவாக சுழற்ற வேண்டும். இப்படி செய்வதால் கைகளில் உள்ள பைசெப்ஸ் தசை பிதுங்கி நிற்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் போது, முழங்கைகள் உடலின் பக்கவாட்டில் ஒட்டியும் வைக்க வேண்டும். இந்த நிலையை ஒரு நொடிக்கு வைத்திருந்து, பின் மெதுவாக எடையை கீழிறக்கி ஆரம்பித்த நிலைக்கு திரும்புங்கள்.

இவ்வாறு ஆரம்பத்தில் 15 முதல் 20 முறையும் பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து அதற்கு மேலும் செய்யலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் கைகளிலும், தோள்பட்டையிலும் வலி இருக்கும். பின்னர் படிப்படியாக சரியாகிவிடும்.

இதய நோயாளிகள் ஏரோபிக் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்

இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஏரோபிக் பயிற்சி எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றைச் செய்யலாம்.

• லேசான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாகப் பயிற்சி நேரத்தை அதிகரிக்கலாம்.

• உடற்பயிற்சி செய்யும் போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால், உடனடியாகப் பயிற்சியின் அளவு மற்றும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

5ba85bf2-3d99-404b-91a3-fdf408c18a20_S_secvpf• இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கப்படும்.

• அடைப்பு இருந்தால் அதன் அளவும் குறையும்.

• உடலில் கொழுப்பின் அளவும் குறையும். நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இன்சுலின் ஏற்புத்தன்மை அதிகரிக்கும்.

• உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சியை மெதுவாகவும் சீராகவும் கூடுதலாக்கிக் கொள்ளலாம். முதல் ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தினமும் ஐந்து நிமிடங்கள் நடக்க முயற்சிக்கலாம்.

வயதானவர்கள் மெதுவாக உடற்பயிற்சி செய்யுங்க

* உடற்பயிற்சியை ஒரேநேரத்தில் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இடைவெளி எடுத்துக்கொண்டு 2, 3 முறையாகச் செய்யலாம். காலை, மாலை என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்யலாம். பொதுவாக, காலையில் சூரிய ஒளிக்கதிர் படும்போது உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. எலும்புகள் நன்கு வலுபெறும்.

* பக்கவாதம், மூட்டு வலி, முடக்குவாதம், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், சேரில் அமர்ந்தபடியே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாம். உட்கார்ந்த நிலையில் தியானம் செய்வதும் ஒருவித உடற்பயிற்சிதான். மனசும் லேசாகும்.

* மிகவும் மெதுவாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆர்வக் கோளாறில், வேகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், வலியுடன் சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

* சாப்பிடாமல் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. இதனால், தலைச்சுற்றல், மயக்கம், பலவீனம் ஏற்படும். உணவு உட்கொண்ட அரை மணி நேரம் கழித்து பயிற்சியில் ஈடுபடலாம். காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள், கஞ்சி குடித்துவிட்டு செய்வது நல்லது.

* துணிகளை உலர்த்துவது, மடித்துவைப்பது, தட்டுகளைக் கழுவுவது, மெதுவாகப் பெருக்குவது என வீட்டிலேயே சில எளிய வேலைகளைச் செய்வதும்கூட நல்ல பயிற்சிகள்தான்.

* கால்கள் அடிக்கடி மறத்துப் போகலாம். உட்கார்ந்த நிலையில் கால்களை அசைத்தும், அடிக்கடி எழுந்து சற்று நடப்பதும் நல்லது. அரைமணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

* இதய பலவீனம் உள்ளவர்கள், மற்றவர்களின் உதவியோடு இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முதன்முதலில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள், மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு உடற்பயிற்சியைத் தொடங்குவது நல்லது. hhhhhhhhhhh

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம். fc53495c-5723-4201-b0b3-4e57243ebba7_S_secvpf

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் 3 அடி அகலம் விட்டு நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை படத்தில் உள்ளபடி பிடித்து கொண்டு கால்களின் முன்பாதம் மட்டும் தரையில் படும்படி படம் 1-ல் உள்ளபடி நிற்கவும். 

பின்னர் முட்டிவரை கால்களை மடக்கி (சேரில் உட்காருவதை போல் ) உட்காரும் நிலையில் இருக்கவும். ஆனால் முன்கால் பாதங்கள் மட்டுமே தரையில் பட (படம் 2-ல் உள்ளபடி) வேண்டும். 

இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். தினமும் இருவேளை இந்த பயிற்சியை செய்து வந்தால் கால்வலி படிப்படியாக சரியாகும்.

உடற்பயிற்சி என்றால் என்னவெல்லாம் செய்யலாம்

• தோட்டத்தில் செடிகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது என 30 முதல் 45 நிமிடங்கள். 

• வீட்டில் கூரை, ஜன்னல், கதவுகளை துடைப்பது, கழுவுவது என 45 முதல் 60 நிமிடங்கள். 

• காரை கழுவி, துடைத்து, மெருகேற்றுவது 45 முதல் 60 நிமிடங்கள். 

• ஐந்து மைல் தூரம் சைக்கிள் ஓட்டுவது – 45 நிமிடங்கள். 

• நண்பர்களோடு கைப்பந்து விளையாடுவது – 45 நிமிடங்கள். 

• குழந்தைகளோடு கால்பந்து விளையாடுவது – 30 முதல் 45 நிமிடங்கள்.

• கூடைப்பந்து மைதானத்தில் தொடர்ச்சியாக கூடையில் பந்தை போடுவது – 30 நிமிடங்கள். 

• பிடித்த பாடல்களுக்கு நடனம், மேலைநாட்டு நடனம், பரதம், குச்சுப்பிடி, மோகினியாட்டம் என ஏதேனும் நடன வகைகள் – 30 நிமிடங்கள். 

• 3 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் நடப்பது. 20 நிமிடங்கள் நீந்துதல். 

• வீட்டைச் சுற்றி விழுந்து கிடக்கும் இலை, தழைகளை கூட்டி சுத்தப்படுத்துவது – 30 நிமிடங்கள். 

• குடும்பத்தினரோடு இறகுப்பந்து விளையாடுவது – 45 நிமிடங்கள். 

• மாடிப்படிகளில் ஏறி இறங்குவது – 20 நிமிடங்கள். ஸ்கிப்பிங் – 15 நிமிடங்கள். 

• மெது ஓட்டம் – 3 கிலோ மீட்டர் தூரம் – 20 முதல் 30 நிமிடங்கள்.

நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி

சீராக உடல் இயங்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், சமயங்களில் உடற்பயிற்சியே சில சிரமங்களைத் தரும் அபாயமும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்னரும், பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம்.  3b8d08a5-2f36-4103-a61c-1550602bf76d_S_secvpf

‘உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching)பயிற்சிகளையும்… உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down) , ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை – கால் தசைகளில், மூட்டுகளில்… இறுக்கம், வலி, சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும். 

ஜிம்முக்குச் சென்றால்தான் இதுபோன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும், சாதாரணமான நடைப்பயிற்சிக்கு தேவை இல்லை எனச் சிலர்  நினைப்பது தவறு. நடைப்பயிற்சியும் ஒருவிதமான உடற்பயிற்சிதான். எனவே, எல்லோருக்கும் இந்தப் பயிற்சிகள் அவசியம்! ”வார்ம் அப் என்பது நடைப் பயிற்சிக்காக உடலை ஆயத்தப்படுத்தும் ஒரு செயல். 

முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் 10 நிமிடங்களுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சுறுசுறுப்பான நடைப் பயிற்சியைத் தொடங்கலாம். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்க் வாக்கிங்’ (Brisk Walking)   என்பார்கள். 30 முதல் 40 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடந்த பின்னர், படிப்படியாக வேகத்தைக் குறைத்து 5 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும். 

இதை ‘கூல் டவுன்’ என்பர். பின்னர் மீண்டும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். வார்ம் அப் என்பது எப்படி இதயத் துடிப்பை, ரத்த ஓட்டத்தை, உடலின் வெப்பநிலையை அதிகப்படுத்துகிறதோ, அதேபோல கூல் டவுன் என்பது அவற்றைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வரும். 

அதிகாலை நேரத்தில்தான் பலரும் நடைப்பயிற்சி செய்கின்றனர். அந்த நேரத்தில் சுற்றுச் சூழலும் நம் உடலும்  குளிர்ச்சியாக இருக்கும். அப்போது நடைப்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தசைகளின் வெப்பநிலையை அதிகரித்துக்கொண்டால், தசைகளுக்கு ஒருவித நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். 

இதனால் தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும். மூட்டுகளை எளிதாக நீட்டி மடக்க முடியும். சாதாரணமாக உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யும்போது நம்முடைய தசைகளில் லாக்டிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தசைகளில் படிவதால், முழங்காலில் வலி, வீக்கம், கால் வலி, சோர்வு ஏற்படும். 

ஆனால், வார்ம் அப் செய்த பிறகு நடைப்பயிற்சி செய்தால் அமிலத்தின் சுரப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அப்படிக் குறைவாகச் சுரப்பதும்கூட நடைப்பயிற்சிக்குப் பின்னர் செய்யப்படும் கூல் டவுன் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளால் சுத்தமாகத் தடைபட்டுவிடும். எனவே, வலி வருவதற்கு வாய்ப்பே இல்லை. 

நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பும் – பின்பும் செய்யக் கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முறைகள் ஒரேவிதமானவைதான். ஆனால், நடைப் பயிற்சிக்கு முன் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 10 நொடிகள் செய்ய வேண்டும். நடைப் பயிற்சிக்குப் பின்னர் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 நொடிகள் செய்ய வேண்டும், அவ்வளவுதான். 

ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று முறை செய்வது அவசியம். பயிற்சியின்போது முதுகு வளையாமல் இருக்க வேண்டும்.  

ஸ்கிப்பிங் செய்தால் எடை குறையுமா?

ஸ்கிப்பிங் செய்வதால் எடை குறையும் என்பதில் சந்தேகமில்லை. திருமணமாகாத, குழந்தை பெறாத பெண்கள் ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பப்பை  இறக்கம் வர வாய்ப்பில்லை. ஆனால் குழந்தை பெற்ற பெண்கள், ஒன்றுக்கு மேலான குழந்தை பெற்றவர்கள் ஆகியோருக்கு கர்ப்பப்பையையும்,  இடுப்பெலும்புக் கட்டை யையும் இணைக்கிற தசைகள் ஏற்கனவே தளர்ந்து, பலவீனமாகியிருக்கும். அவர்கள் ஸ்கிப்பிங் செய்தால், அந்தத் தசைகள்  மேலும் தளர்ந்து, கர்ப்பப் பை இறங்கும் வாய்ப்புகள் அதிகம். மற்ற பெண்களும் மிதமாகவே இந்தப் பயிற்சியைச் செய்வது நல்லது. 

மாதவிலக்கு நாட்களில் ஸ்கிப்பிங் என்றில்லை, எந்தவிதமான உடற்பயிற்சியையுமே செய்யாமலிருப்பதுதான் சிறந்தது. அந்த நாட்களில் ஏற்கனவே  உடல் களைத்துப் போயிருக்கும். உடற்பயிற்சிகள் அந்தக் களைப்பை இன்னும் அதிகரிக்கும். உடலை வருத்தும் பயிற்சிகளைத் தவிர்த்து, மூச்சுப்  பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம்.