குறைந்த நேர உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்

உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரித்து தசைகளை வலுவுறச் செய்வதில் சிறந்து செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. 2a6cefe4-8033-4519-a683-fd87f748ed75_S_secvpf

நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில், உங்களுக்கு பயனை அளிக்கும் 15 நிமிட தீவிரமான இடைவெளி பயிற்சியில் கூட ஈடுபடலாம். ட்ரெட்மில், குந்துகைகள், லங்ஸ் மற்றும் பர்பீஸ் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடிக்காத உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்தால் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படாது. 

நல்லதொரு வியர்வை சிந்தும் நேரத்தை செலவிட பல வழிகள் உள்ளது. அதனால் உங்களுக்கு பிடித்தவைகளை தேர்ந்தெடுங்கள். அவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவைகளைப் பற்றி கற்றுக்கொண்டு அதனை அனுபவிக்க தொடங்குங்கள். ஸூம்பா வகுப்பு, ஸ்பின் வகுப்பு, குத்துச்சண்டை போன்றவைகளை முயற்சி செய்து பார்க்கலாம். 

நீங்கள் செய்வதை விரும்பி செய்தால், அதனை தொடர்ந்து செய்வீர்கள். அதனால் அதிக பயனையும் பெறுவீர்கள். தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், தரையில் படுத்துககொண்டு டி.வி பார்க்கும்போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். 

இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும். வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க எளியவகை உடற்பயிற்சிகளை மட்டும் செய்தாலேபோதும்.

நீண்ட காலம் ஆரோக்கிமாக வாழ உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக, உயர்தர ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதில் அணு அளவும் ஐயமில்லை. ‘உடற்பயிற்சி செய்தால் நீண்ட காலம் சிறந்த ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று உறுதி அளிக்க முடியும். 8a1daf35-2cdd-4eac-96dc-faaeac21a4b7_S_secvpf

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் இறுதி வரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  உடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் – தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்… 

நீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொடங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும். 

முன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.  மூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்ல… எவரது உதவியும் இல்லாமல் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.

மூன்றே வாரத்தில் எடையை குறைக்கும் ஒர்க்-அவுட்கள்

நீங்கள் உடலின் அதிகமான கலோரிகளை எரிக்க விரும்பினால், அதற்கு கடுமையான பயிற்சியுடன் கூடிய, உணவுக் கட்டுப்பாட்டை நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கும். 3bb7d329-6e87-46df-8d5a-0203ac034f01_S_secvpf

இந்த பயிற்சிகளை 3 வாரங்களுக்குப் பின்பற்றி வந்தால், உங்களுக்கு ஆச்சரியப்படச் செய்யும் பலன்கள் கிடைக்கும். இந்த எடை குறைப்புப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், நீங்கள் முதலில் கணித்ததை விட நல்ல பலன்கள் கிடைத்து எடை குறையும்.எவ்வாறு மூன்றே வாரத்தில் எடையைக் குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்… 

• எடை குறைப்புக்கான சிறந்த ஒர்க்-அவுட்களை செய்யும் போது, நீங்கள் செய்யும் வார்ம் அப் பயிற்சி, உடலின் குறிப்பிட்ட தசைகளை இயங்கச் செய்யும். தடையற்ற வகையில் புஜங்களை சுழற்றவும், கைகளை அசைக்கவும் மற்றும் மூட்டு இணைப்புகளை இயக்கவும் வார்ம்-அப் அவசியம். முதலில் இந்த வார்ம் அப் பயிற்சி செய்யாமல் மற்ற பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்க கூடாது.

• ஹிட்ஸ், பொதுவாகவே ஓட்டம் தான் 3 வாரங்களில் எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளில் மிகச்சிறந்த வழிமுறை என்பார்கள். 100 மீட்டர் ஹிட்ஸ்களை 10 முறை திரும்பத் திரும்பச் செய்யுங்கள். ஒரு ஹிட்ஸிலிருந்து மற்றொன்றை தொடங்கும் முன்னர் குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் ஓய்வெடுங்கள். முதல் வாரத்தில் ஒவ்வொரு ஹிட்ஸ்-க்கும் இடையில் நீங்கள் வேறெதுவும் செய்யத் தேவையில்லை. எடை குறைப்புக்கான பயற்சிகளில் ஹிட்ஸ் சிறந்த பயிற்சி என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை.

• ஹிட்ஸ் பயிற்சிக்குப் பின்னர் நீங்கள் புஷ்-அப் செய்யலாம். மார்புப் பகுதியிலுள்ள கொழுப்புகளை எரிக்க விரும்பினால், கால்களை தூக்கி வைத்தவாறு பயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களுடைய மார்பக தசைகளில் இறுக்கங்கள் ஏற்படும். 3-வது வாரத்தில், ஒவ்வொரு ஹிட்ஸ் பயிற்சிக்குப் பிறகும், குறைந்தது 6-7 தடவைகள் புஷ்-அப் பயிற்சிகளை செய்து வரவும்.

• ஹிட்ஸ் மற்றும் புஷ்-அப் பயிற்சிகளை நீங்கள் செய்து முடித்தவுடன், ஸ்பாட் ரன்னிங் பயிற்சியை தொடங்கவும். உயரமான அளவிற்கு முழங்காலை செயல்படுத்தினால் மட்டுமே ஸ்பாட் ரன்னிங் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

• ஹிட்ஸ் பயிற்சிக்கு முன்னர் அல்லது பின்னர் என எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சியை அடிப்படையாகவே எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். 2 நிமிட நேரத்திற்கு, 3 அல்லது 4 முறைகளுக்கு ஸ்கிப்பிங் பயிற்சியை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

• நீங்கள் செய்யும் பயிற்சிகளின் நிறைவாக ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை செய்தால் மட்டுமே மற்ற பயிற்சிகளின் பலன் முழுமையாகக் கிடைக்கும். உடற்பயிற்சி பந்து கொண்டு பயிற்சி செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும்.

• ஸ்ட்ரெட்சிங் பயிற்சிக்குப் பிறகு நீச்சலடிக்கச் செல்லுங்கள். அது உங்களுடைய தசைகளை தளர்வடையச் செய்வதுடன், கலோரிகளையும் எரித்திடும்.

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்

தொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.
இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும்,எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

 

ரெகுலர் பிளாங் பயிற்சிகள்

ரெகுலர் பிளாங்க் பயிற்சியானது குறுக்கில் உள்ள வயிற்றுத்தசைகளை பலமடையச் செய்கின்றது. குறுக்கு வயிற்றுத்தசையானது வயிற்றில் உள்ள தசை மற்றும் நடுவயிறு ஆகியவற்றில் கீழ் உள்ள ஆழமான படலமாகும். ரெகுலர் பிளாங்க் எவ்வாறு செய்வது என பார்ப்போம். b5c79b5f-0824-4f47-8be3-8da9787db067_S_secvpf

ஒரு நல்ல விரிப்பில் குப்புறபடுத்துக்கொண்டு கைகள் தோளுக்கு நேராக இருக்கட்டும். விரல்கள் நன்கு நேராக நீட்டப்பட்டு இருக்கட்டும். கால்களின் உள்ள விரல் பகுதியினை நன்றாக ஊன்றி உடலின் மேற்பகுதியை மட்டும் தூக்கி தோள்களின் பலத்தில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். 

கழுத்து முதுகெலும்பு போன்றவை நேராக இருத்தலும், வயிற்று தசைகளை சுருக்கிவைத்தலும் கவனத்தில் கொள்ளல் அவசியம். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக அதிகரித்து கொள்ள வேண்டும்.இந்த பயிற்சி செய்வதால் கால்களும், கை தசைகளும் நன்கு வலிமை அடைகின்றன.

எக்ஸ்ட்ரா சதை குறைய பைக் ரீகம்பென்ட் பயிற்சி

ஜிம்மில் என்னென்ன உபகரணங்கள் இருக்கின்றன? உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்? என்பதை பார்க்கலாம். aaabb042-95be-4900-ad07-03b82bb0ddfa_S_secvpf

1.கலோரிகளைக் குறைக்க டிரெட்மில் :


ஒரே இடத்தில் இருந்தபடி நடக்க, ஓட உதவும் இயந்திரம் இது. இதன் உதவியால் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை குறைக்கலாம். நடக்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் இதில் வசதி இருக்கிறது. ஜிம் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே இதை வைத்திருப்பார்கள். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து பயிற்சி செய்வது நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் இப்பயிற்சி செய்வது நல்லதல்ல. மூட்டுவலி வரும் அபாயம் உண்டு.

2.எக்ஸ்ட்ரா சதை குறைய பைக் ரீகம்பென்ட் :

பைக் ஓட்டுவது மாதிரியான பயிற்சி, பெடல் போடுவது போல கால்களை சுழற்ற வேண்டும். அடிவயிறு, தொடைப்பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரா சதை குறையும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சரியான சாய்ஸ். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் எடை குறையும். ஃப்ரெஷ்னெஸ் கிடைக்கும்.

3. முதுகு, தண்டுவட உறுதிக்கு ஹைப்பர் எக்ஸ்டென்ஷன் :

இந்த இயந்திரத்தின் உதவியோடு முன்புறம் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யலாம். முதுகுத் தசைப் பகுதிகளையும், தண்டுவடத்தையும் உறுதி செய்யும் உடற்பயிற்சி. எல்லா வயதினருக்கும் ஏற்றது. டூவீலர் ஓட்டும் பெண்கள், இதனைத் தொடர்ந்து செய்தால் முதுகு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்கும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள்

பெரும்பாலும் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகுவலிக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் பிரசவ காலத்தில் அவர்கள் நிற்கின்ற போதும் நடக்கின்ற போதும் வயிற்றை முன் தள்ளி நிற்க பழகிவிடுகின்றனர். 58aab957-406f-4b82-a146-54ca630b9fca_S_secvpf

பிரசவத்திற்கு பின்பும் அதே நிலை ( posture) நீடிப்பதால் முதுகு எலும்பு மற்றும் எலும்பின் நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்பிற்குள்ளாகின்றது அதே போல் இப்போது வலியற்ற பிரசவத்திற்காகவும் மற்றும் சிசேரியன் செக்‌ஷன்காகவும் முதுகுத்தண்டில் ஏற்றப்படும் ஊசிகளால் முதுகெலும்பு பல பின் விளைவுகளை சந்திக்கின்றது. 

பெரும்பாலும் முதுகெலும்பினை நேராக வைத்து அமர்வதற்கும் நடப்பதற்கும் பழகிக்கொண்டாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. சாதாரண உடற்பயிற்சிகளை விடவும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள் மிகச்சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால் இன்றும் பாடி பில்டர்கள் தங்கள் உடலை வலுவாக்க இப்பயிற்சியினை மேற்கொள்கின்றனர்… 

1. டேபிள் டாப் எனப்படும் நிலைக்கு முதலில் நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி 90 டிகிரி அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் முதுகெலும்பை சற்று கவனத்தில் கொண்டு வந்து பாருங்கள். அதில் லேசான வளைவு கண்டிப்பாக இருக்கும். இப்போது வளைவுடன் இருக்கும் முதுகெலும்பை முடிந்த அளவு நேராக்கி சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும் 

2. இரண்டாவது நிலை ..பெல்விக் ப்ரிட்ஜிங் …கால்களை மடக்கி வைத்துக்கொண்டு இடுப்பு பகுதியினை மட்டும் முடிந்த அளவு உயர்த்தி அதே நிலையில் 30 வினாடிகள் இருத்தல் வேண்டும். இது போல் 3 செட்கள் அவசியம். 

3. பைலேட்ஸ் கிரன்ச் ….கால்களை 90 டிகிரியளவில் மடக்கி வைத்துக்கொண்டு உடலை மேல் நோக்கி முடிந்த அளவு கொண்டு வந்து 30 செகண்ட்கள் இருத்தல் வேண்டும். 

4. குப்பறபடுத்துக்கொண்டு இருகால்களையும் ஒன்றாக்கி முட்டியை மடக்காமல் எவ்வளவு தூரம் மேல் நோக்கி தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் மேல் தூக்கி நிறுத்த வேண்டும். 

6. ஏர் பிளானிங்…. வலது காலையும் இடது கையையும் தரையில் ஊன்றிக்கொண்டு முதுகெலும்பை வளைக்காது உடலை நேராக்குங்கள். இந்த நிலையை சூப்பர்மேன் போஸ் என்றும் ஏர் பிளானிங் என்றும் கூறுவர். 

மேற்கண்ட பயிற்சிகள் அனைத்தையும் ஒரு நல்ல பிசியோதெரபிஸ்டின் மேற்பார்வையில் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் முதுகுவலிக்கு குட் பை கண்டிப்பாக சொல்லலாம்…. 

எந்த பயிற்சியும் தொடர்ந்து செய்து வருவதன் மூலமே பலன் கிடைக்கும். செய்ய ஆரம்பிக்கும் போது சற்று வலி அதிகமாக இருக்கும். அதனால் பயிற்சியை பாதியில் விட்டுவிட கூடாது. தொடர்ந்து செய்து வந்தால் வலி படிப்படியாக குறையும்.

இளமை பருவ உடற்பயிற்சி இதய நோயை தடுக்கும்

இன்றைய கால கட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாகிறது. இளைஞர்கள் இளமை காலத்தில் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு, பிற்காலத்தில் வரும் இதய பிரச்சனைகள் வராமலும் தடுக்கும். 10f1749b-04f3-49bd-a771-bf6f042c0947_S_secvpf

இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும். 

நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். 

அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது. இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. 

இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதய நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. 6fcb8475-eb62-4d0d-97a6-9a5320ce96f9_S_secvpf

எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. இடுப்பு பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் உள்ளன. 

இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.  

கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும். இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும். 

பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும். இதுபோல் மாறி மாறி 20 முறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30  முறை செய்யலாம்.

உடலமைப்பிற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்க

விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள்…  இப்படி பல இடங்களில் ஆண், பெண் இருபாலரும் மிகவும் அதிகமாக, சிரமப்பட்டு உடலை வருத்தி உடற்பயிற்சி செய்வதைக் காணலாம். 92f9867d-4c78-453e-ab46-cc6349981e89_S_secvpf

குறிப்பாக இளம்பெண்கள் தம் உடலை மிக ஒல்லியாக, அழகாக மாற்றும் எண்ணத்தோடு,  உணவைக் குறைத்து, வாரம் 7 நாட்களும், தினம் 2 – 3 மணி நேரம் ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், நடைப்பயிற்சி, ஓட்டம், நீந்துதல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் என அனைத்தையும் ஒரே மூச்சில் செய்கிறார்கள். 

இளைஞர்களோ 6 பேக் / 8 பேக் என தம் வயிற்றில் அடுக்கடுக்கான தசைப்பிடிப்புக் கட்டுகளை உண்டாக்க பளு தூக்கும் கூடமான ஜிம்மில் நிரந்தரமாகக் குடியேறி விடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப, அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, வீட்டு, அலுவலக வேலைத்திறன், வயிறு, உடலில் உள்ள ஆரோக்கியக் குறைவு என அனைத்தையும் மனதில் கொண்டே உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

நல்ல பயிற்சியாளர்களிடம் அறிவுரை கேட்டு  செய்வது மிகவும் அவசியம். ஒரே நாளில் யாருமே அதிக உடற்பயிற்சி செய்வதால் சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுவிட முடியாது.

அதிகமாக உடலை வருத்துவதால் மூட்டுவலி, மயக்கம், வலிமைக் குறைவு, தசை வலிகள், தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகள் இணையும் அனைத்துப் பகுதிகளிலும் வேதனை என பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.