மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்

1910656விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.

நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.ad16974f-f58a-4b23-b972-d49f29c34a5c_S_secvpfமலச்சிக்கலால்  உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

எளிய பயிற்சிகள்… நிறைய நன்மைகள்

நடையும், மெல்லோட்டமும் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்பதை பார்க்கலாம்.

நடையும், மெல்லோட்டமும் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்று தெரியுமா?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எளிதாக மேற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சி, இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராகத் தரும். உடல் எடையைக் குறைக்கும்.

மறதி நோய் வராமல் காக்கும். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எலும்புச் சிதைவு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்) வராமல் தடுக்கும்.

வைட்டமின் டி அளவை உடலில் அதிகரிக்கச் செய்யும். எந்த நோய் ஏற்பட்டாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும்.

இனி, ‘ஜாக்கிங்’ அதாவது, மெல்லோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

மெல்லோட்டமானது ஓடுவதைப் போலவும் இல்லாமல், நடப்பதைப் போன்றும் இல்லாமல் மெதுவாக சீராக ஓடும் பயிற்சி ஆகும்.

jogging-man-and-womenமெல்லோட்டத்தின் நன்மைகள்…

எலும்புகளை உறுதியாக்கி தசைகளை வலுவடையச் செய்யும். இதயத் துடிப்பைச் சீராக்கும்.

உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும். உடலெங்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடல் புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையை மேம்படுத்தும்.

ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் மெல்லோட்டப் பயிற்சியை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது சிறந்தது.

மாரடைப்பைத் தடுக்க உதவும் மெல்லோட்டம்

மெல்லோட்டத்தை தொடர்ந்து செய்து வந்தால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.

மெல்லோட்டத்தின் பயன்கள் :

இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.

இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.1910656

ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.

ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.

இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.

நடைபயிற்சி – வகைகள் – நன்மைகள்

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிகசிறிய வயதி ல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் ff6098b1-0c00-4c96-be29-462b6ea4332d_S_secvpfஎன்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகி ன்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடை ப்பயிற்சி செய்யுங்கள். நடை ப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப்போல் இருக்கும் அங்கு எல் லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்றுவரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடை பயிற்சியல் ஈடுபடுகின்றனர். நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசி யமான ஒன்றாகிவிட்டது இன்று.
நடைப்பயிற்சி:
கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனை யும் பெறலாம். 
walking-style1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்த வராக (தரையை பார்க் காமல்) இருபது அடி முன் னோக்கியவாறு நடங்கள்.
2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதா ரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்தி ருங்கள்.
3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்க வாட்டில் ஆட்டாமல்), அதே வேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்தி விடா மல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால் களும் பின் தொடரும்..
4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்
புறம் சாய்த்தவாறு நடங்கள்.
5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடி களை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங் கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.
6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல் களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சி யாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங் கள்.
19106567. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள் ளுங்கள்.
நடைப்பயிற்சியின் வகைகள்:
நடைப்பயிற்சில மூணு வகை உண்டு.முதல் வகை மெதுவாக நடக்
கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.
உடல் வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவற தோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்பு களையும் இதமாக்கி, காயங்கள் வராம லும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ள வங்களுக்கு ஏற்ற நடை இது.
அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால் களையும் வேகமா வீசி நடக்கிறது. இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம் புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும்.
வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்த மாகும். தசைகளும் எலு ம்புகளும் அதிக வலு வைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக் காரர்களுக்கு ஏற்ற நடை இது.
e0e60dc5-9441-4e35-8596-b3f792190567_S_secvpfமூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிற
வங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத் தைக் கொஞ்சம் கூட்டும் போது மிதமான, மிக மிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலு க்குள்ள போய், அதன் விளைவா இதயத்து க்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவை யில்லாத அத்தனை கழிவுப் பொருள்க ளையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ் வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணிநேரம் வரை நடக்கலாம். இளவயசுக்கார
ங்க 1 மணி நேரமும், 30&40 வயசுக் காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50&60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்க லாம்.
எப்ப நடக்கலாம்:
அதிகாலைல நடக்கிறது நல்லது. அது முடியாதவங்க ராத்திரி சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்குப் பிறகு நடக்கலாம். நடக்க ஆரம்பிச்ச புது சுல, சிலருக்கு கஷ்டமா இருக்கலாம். முதல்ல வாரத் துக்கு இரண்டு முறை நடந்து, அப்புறம் தினசரி நடக்க உடலை தயார் படுத்தலாம்.
நடைப்பயிற்சி தொடங்கும் முன்:
 • எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.
 • அதிகாலைல நடக்கிறவங்க, அது க்கு முன்னாடி அரை லிட்டர் தண் ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக் கலாம். 
 • உடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்பு களில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம்:
a34f762b-2139-494e-b6b6-4046ff75e735_S_secvpfநன்கு பரிச்சயமான பாதுகாப்பான மற்றும் மனித நடமாட்டம் உள்ள பகுதியை தேர்ந் தெடுத்து நடக்கத்துவங்குங்கள். திடீரெ ன்று உடல் நலமில்லாமல் ஆனாலோ அசதி, அல்லது களைப்பு ஏற்பட்டாலோ வழியை தவறவிட்டு மேலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இது உதவும். 
பொதுமக்கள் இளைப்பாறும் பூங்காக்கள் , மைதானங்கள் மற்றும் கடைத்தெருக் கள் அருங்காட்சியகங்கள் போன்றவை ஆரம்ப காலத்தினருக்கு சிறந்த நடக்கும் இடங்களாகும். சற்று திடமான மற்றும் ஆரோக்கியமானவர்கள் பெரிய மைதானங்கள் மற்றும் இயற்கையான காட்சிகள் நிறைந்த சோலைகள் நடைபாதைகள் என்று பல விதமான இடங்களினை தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ள ன. ஆயினும் அந்த இடத்தை பற்றிய மு
ழுமையான விபரங்கள் அறிந்திருப் பதும் பாதைகளை விவரிக் கும் வரை படங்கள் போன்ற சாதனங்கள் வைத்திரு ப்பதும் அவற்றை முறையாகப் பயன் படு த்த அறிந்திருப்பதும் நல்லது.
 
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வ தால் ஏற்படும் பயன்கள்:
 • இரத்த ஓட்டம் சீரடையும் 
 • நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும் 
 • நாளமில்லா சுரப்பிகள் புத்துணர் ச்சி பெறும்.
 • அதிகப்படியான கலோரிகளை (Calories ) எரிக்க உதவுகிறது
 • முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது

 • அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது
 • மூட்டுக்களை இலகுவாக்குகிறது
 • எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது
 • உங்கள் கால்களையும் உடலை யும் உறுதியான அமைப்பில் வைக் கிறது
 • கெட்ட கொழுப்புச்சத்தின் (Choles terol) அளவை குறைக்கிறது
 • மாரடைப்பு சர்க்கரை நோய் போ ன்றவற்றின் அபாயத்தைக் குறை க்கிறது
 • உடல் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது
 • நல்ல தூக்கம் வர உதவு கிறது
 • நல்ல கண்பார்வையை வழங்குகிறது

முறையாக நடைப்பயிற்சி மேற் கொள்வதன் மூலம் நலமாக வாழலாம். வீண் மருத்துவச் செலவை தவிர்க்கலாம் முப்பது வயதி ற்கு மேற்பட்டவர்கள் நடைப்பயிற்சி தினமும் 40 நிமிடங்கள் செய் தால் கூட போதுமானது.