உடற்பயிற்சி பற்றி நிலவும் சில தவறான கருத்துக்களும்- உண்மைகளும்

man-doing-dumbbell-pushupsபொதுவாக சிலர் உடற்பயிற்சி ஆரம்பிக்கும்போது தவறான அறிவுரைகளால் தவறான முறையில் உடற்பயிற்சி ஆரம்பிப்பார்கள். 10 நாட்களில் உடல் எடை குறைக்கலாம் இந்த பயிற்சியை செய்தால் என பல விளம்பரங்களை நீங்கள் பாத்திருக்கலாம். செய்து பார்த்து தோல்வியும் அடைந்திருக்கலாம். ஆனால் அப்படி எல்லாம் ஒரே வாரத்தில் உடல் எடை குறையாது. குறையவும் கூடாது. உடலின் தன்மையைப் பொறுத்து சில வாரங்களில் அல்லது மாதக்கணக்கில் உடற்பயிற்சியால் உடல் எடையை குறைக்கலாம். உடற்ப்யிற்சி செய்யும்போது இதெல்லாம் செய்யவேண்டும். இதெல்லாம் செய்யக் கூடாது என பல விதமான அறிவுரைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதில் எவை உண்மை, எவை பொய் என ஒரு மருத்துவர் கூறுகிறார் கேளுங்கள்.

தொப்பையை குறைக்க வயிற்றிற்கு பயிற்சி அளிக்க வேண்டும்! இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. ஒழுங்கான உணவுக்கட்டுப்பாட்டுடன், தவறாத உடற்ப்யிற்சி இருந்தால் உடல் எடை எல்லா இடத்திலும் சீராக குறையும்.

வாரம் இரு நாட்கள் உடற்பயிற்சி போதும்: இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும் உறுப்புக்களும் நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரம் நான்கு நாட்கள் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

வியர்வை பெருக்கெடுக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் : இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை jumping-jacks-exercisesதணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி தராமல் மிதமான இயக்கத்துடன் இருந்தாலே உடல் குறையும். வியர்வை கட்டாயம் வர வேண்டுமென்பதில்லை.

நடப்பதை காட்டிலும் ஓடுவதால் வேகமாக உடல் எடையை குறைக்கலாம்
தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருந்தால் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. 10 நிமிடங்கள் நடப்பவரை விட அதே 10 நிமிடங்களில் ஓடுபவர் இன்னும் அதிக தூரம் செல்கிறார். ஆகவே அதிக கலோரி எரிக்கப்படுகிரது. எனவே தூரம்தான் காரணம். ஒரே தூரத்தை ஓடுதல் அல்லது நடைபயிற்சியால் கடக்கும் போது எந்த வித்தியாசமும் ஏற்படாது.

உடற்பயிற்சியை வேகமாக செய்ய வேண்டும் : இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

21143963-d143-4db5-add5-3a715ce4ee0e_S_secvpfஉடற்பயிற்சிக்கு பிறகு 3-5 நிமிடங்களுக்குள் இதயத்துடிப்பு சீராக வேண்டும் : சரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

நடப்பது இதயத்திற்கு நல்லது : இது உண்மைதான். நாம் வெகு நெரம் அமர்ந்து அல்லது நின்று கொண்டேயிருக்கும்போது போதுமான ரத்தம் கால்களிலேயே இருக்கும். போதுமான அழுத்தம் இல்லாத காரணத்தால் இதயத்திற்கு திரும்ப ரத்தம் அனுப்ப முடியாது. நடப்பதால் இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் குறைந்த பட்சம் 2 கி.மி. நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். இதயம் வலுப்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *