முதுகு வலியை துரத்தி பலப்படத்தும் டெட் லிப்ட் உடற்பயிற்சி

ஹாய் மீண்டும் இப்போது சிறந்த உடற்பயிற்சி ஒன்றுடன் வந்திருக்கின்றோம். உடற்பயிற்சி கட்டுரைகளை தொடர்ந்து இன்று நாம் டெட் லிஃப்ட் என்ற உடற்பயிற்சியைப் பார்ப்போம்.

டெட் லிப்ட் என்ற இந்த உடற்பயிற்சியானது மிகவும் சக்திவாய்ந்த உடற்பயிற்சி நமது தலை முதல் கால் வரை உள்ள சதைகளை நார் நாராக கிழித்து பலம் ஏற்றக்கூடிய உடற்பயிற்சி. நன்றாக செய்தால் போதும் தானாகவே உடல் பலம் பெரும்.

முதுகுத்தண்டை பலப்படுத்த உதவும் உடற்பயிற்சி. ஆண்மகளை நிமிரச்செய்யும் உடற்பயிற்சி. இதை டம்பெல் மற்றும் பார்பெல் இரண்டையும் கொண்டு செய்யலாம் ஆனால் டம்பெல்லை விட பார்பெல் தான் சிறந்தது. பார்பெல்லில் உடலால் எவ்வளவு அதிகமாக தூக்கமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக வெயிட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். ( பயிற்சி ஆரம்பத்தில் Free வெயிட்டில் செய்ய வேண்டும் ). பின் தான் அதிகமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

செய்முறை

ராடில் பார்பெல்லை எடுத்து இருபக்கமும் இணைத்துக்கொள்ளுங்கள். இடுப்பைச் சுற்றி அகலமான பெல்ட் அல்லது துண்டைக் கட்டிக்கொள்ளவும். இப்போது பாரை இரண்டு கைகளாலும் படத்தில் உள்ளவாறு பிடித்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் ஒரே மாதிரி கைகளை பிடிக்கவும். பின்னர் ஒரு உட்பக்கமும் இன்னொரு கை வெளிப்பக்கமும் பிடிக்கவும்.dead_lift

கைகளின் வேலை பாரை இறுக்கமாக பிடிப்பது பட்டும் தான் இடுப்பால் தான் தூக்கவேண்டும். குனிந்து பாரை எடுத்துக்கொண்டு அப்படியே நிமரவும். மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன் கைகளால் பாரை தூக்கக்கூடாது இடுப்பால் தான் தூக்கவேண்டும். கைகள் வளையவே கூடாது. படித்தில் காட்டியுள்ளது போல் நிமிரவும். பின்னர் மூன்று நொடிகள் கழித்து குனிந்து தரையில் படாமல் மூன்று நொடிகள் பொறுக்கவும். மீண்டும் நிமிரவும், குனியவும். இது போல் செய்து கடைசி ரெப்பில் தரையில் வைத்துவிடவும்.

மூன்று செட்கள் செய்யவும் இந்த உடற்பயிற்சியை தொடைகளுக்கு ஸ்குவாட் செய்யும் போது சேர்த்து செய்து விடுங்கள். இடுப்பை இரண்டாக வெட்டிப்போட்டவாறு வலிக்கும் புதியதாக செய்தால். வீட்டுக்கு சென்று நன்றாக வெந்நீர் வைத்து குளிக்கவும். உடனே சரியாகிவிடும்.

இந்த உடற்பயிற்சி மேற்காட்டிய படத்தில் உள்ள வாறு உடலில் உள்ள நார்களை பலப்படுத்தும், புட்டம், கைகள், கால்கள், கழுத்து, முதுகு, வயிறு என்று அனைத்திற்கும். இந்த உடற்பயிற்சி சக்தியைத்தரும். சைடு போஸிங்கை அழகாக்கும. ஆண்களின் புட்டப்பகுதியை பட்டர்பிளை போன்று மாற்றிவிடும். கால்களை நேராக்கும். கூன் விழுந்தவர்களை கூட இதை வைத்து சரிசெய்துவிடலாம்.

இந்தப்பயிற்சி தரும் முதுகுவலியை விட வேறு முதுகுவலி இருந்தால் ஓடிவிடும். பயற்சி பழகிவிட்டால் 12 வாரங்களில் முதுகு வலி என்ற பேச்சுக்கு இடமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *