தொப்பை” to “சிக்ஸ்பேக்”!

ஒருவர் தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியது, சரியான உடற்பயிற்சியுடன், உணவுகளும் தான்.
எனவே நீங்களும் உங்கள் தொப்பையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டுமெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முதலில் பின்பற்றுங்கள். குறிப்பாக இவை சிக்ஸ் பேக் வைப்பதற்கு தொப்பையைக் குறைக்க மேற்கொள்ளும் அடிப்படை உடற்பயிற்சிகள்.
ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா?

சிட்-அப்ஸ் :
கால்களை அகல வைத்துக் கொண்டு ஒரு 7-10 கிலோ எடைக்கல்லை இருக்கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டு, முதுகை வளைக்காமல் அப்படியே உட்கார்ந்து எழ வேண்டும். இம்மாதிரி 12 முறை என 3 செட்டுகள் செய்ய வேண்டும்.

க்ரஞ்சஸ் (Crunches) :
உங்களுக்கு சிட்-அப்ஸ் செய்வதற்கு வசதியாக இருக்கும் போது, சற்று சவாலான உடற்பயிற்சிகளான க்ரஞ்சஸ் மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.
அதுவும் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, முன் உடலை மேலே தூக்க வேண்டும்.
இப்படி ஒரு செட்டிற்கு 12 என்ற வீதம் 3 செட் செய்து வர வேண்டும். 2 நாட்களுக்குப் பின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு இப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
இதனால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.

லெக் லிப்ட்ஸ் (Leg Lifts) :
ஒரு கம்பியில் தொங்கிக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, மார்பகத்தை தொடும் வகையில் தூக்க வேண்டும் அல்லது கால்களை மடக்காமல், இடுப்பளவில் கால்களை முன்னோக்கித் தூக்க வேண்டும்.
இது ஒரு ஆப்ஸ் உடற்பயிற்சி மற்றும் இப்படி செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் குறையும்.

உடலைத் தாங்குதல் :
இந்த உடற்பயிற்சிக்கு புஷ்-அப் போன்று படுத்துக் கொண்டு, கைகளால் உடலைத் தாங்காமல், முழங்கையால் உடலைத் தாங்க வேண்டும்.
அப்படி தாங்கும் போது, உடலும், காலும் ஒரே நேராக இருக்க வேண்டும்.
இந்நிலையில் 1 நிமிடம் என 3 முறை செய்து வந்தால், வயிற்றில் இருக்கும் கொழுப்புக்கள் கரையும்.

அளவுக்கு அதிகமாக வேண்டாம் :
தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமென்று, ஆர்வக்கோளாறில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது நீண்ட நேரமோ உடற்பயிற்சியில் ஈடுபடுவதை முதலில் தவிர்க்க வேண்டும்.06-

குறிப்பு :
இப்படி அன்றாடம் செய்து வந்தால், நீங்களும் சிக்ஸ் பேக் உடலுடன் அழகாகத் திகழலாம். ஏனெனில் இப்படி சிம்பிளான உடற்பயிற்சிகளைத் தான் ஜப்பானியர்கள் அன்றாடம் செய்து தொப்பை இல்லாமல் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *