பாடிபில்டிங் உருண்டு திரண்ட திண் தோள்கள் வேண்டுமா

பாடிபில்டிங்கின் கட்டுரைகளில் தொடர்ந்து இப்போது நாம் உடற்பயிற்சி பழகி 5 மாதங்கள் ஆகியிருப்போம் நம் உடலும் ஒரளவு வளர்ந்திருக்கும் (?) ( நம்பிக்கை முக்கியம் ). நமக்கு கண்ணெல்லாம் பைசெப்ஸ் மற்றும் செஸ்ட் மேல தான் ஆனால் ரொம்ப முக்கியம் நமது உருண்டையான தோள்கள் தான். சைடு போஸிங்கில் நமது தோல்கள்தாள் நமது அழகை காட்டும். அதனால் முக்கியமாக தோள் பந்து கிண்ணப்பகுதியை உருண்டையாக்க வேண்டும்.

இது மட்டும் வளர்ந்து விட்டால் நீங்கள் போடும் சர்ட்கள் மட்டும் டீ சர்ட்கள் உங்களுக்கு பிட் ஆக மாறிவிடும். சொல்லப் போனால் வெறுமனே கைகளை உயர்த்தினாலே போதும் கட்டுக் கட்டாக தெரியும் ( தோள் கண்டார் தோளே கண்டார்).

இந்த பயிற்சியின் பெயர் One Arm barbell raise அப்டின்னு நாங்க பேர் வச்சிருக்கோம் எங்க ஜிம்மில்… இல்லையென்றால் Wall Mounted Barbell Raise என்று பெயரை வச்சிக்கலாம். காரணம் இருக்கு.

நாம் ஒரு 20 வருடங்கள் பின்னாடி போனால் ஜிம்மில் காணாப் போன ஒரு Equipment யை பார்க்கலாம் அது பெயர் கர்லா கட்டை. கட்டையை தூக்கவே ஒரு மாதம் பயிற்சி ஆகும் பின்னர் அதை தலையை சுற்றி ஒரு சுற்று சுற்றினால் இரண்டு மாதம் பயிற்சி ஆனால் மூன்றாவது மாதத்தில் பையன் சுற்று சுற்று என்று சுற்றி பயங்கரமாக செய்வான்.

இப்போது அவனுக்கு ஒரு சிலிண்டரை முழுமையாக தூக்கும் அளவுக்கு சக்தி கிடைத்திருக்கும் என்பதில் அச்சமில்லை. ஏனென்றால் ஒரு கர்லா கட்டை 14 கிலோ இருக்கும்.

காலப்போக்கில் மாடர்ன் பொருட்கள் வர வர ஜிம்மில் இருந்து கர்லா கட்டை அடுப்புக்கு விறகாக போய் விட்டது ஆனால் நான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். T-Shirt போடும் நேரம் வந்தால் உடனே கட்டையை எடுத்து 50 சுற்று சுற்றிவிட்டுதான் வைப்பேன்.

சரி வொர்க்கவுட்டுக்கு வரலாம் அந்த கட்டை கரிக்கட்டையாச்சு அதனால் தான் இந்த வால் மவுண்டடு பார்பெல் ரெயிஸ்க்கு வந்துள்ளோம். இது ஒரு மாஸான உடற்பயிற்சி. ஒரு பெரிய பார்பெல்லின் ஒரு முனையை ஜிம்மின் ஏதாவது ஒரு சுவற்றின் ( பெயர்க்காரணம் புரிகின்றதா? ) மூலையில் வைத்துவிட வேண்டும்.

பின் இன்னொரு முனையில் தேவைக்கேற்ப பிளேட்களை பொருத்தவேண்டும். நின்று கொண்டு கடப்பாரையில் ஒரு கல்லை நெம்பினால் என்ன செய்வோம் அதுபோல் முதலில் ஒரு கையில் ஒரு முனையை பிடித்துக் கொண்டு உயர்த்தி பின் தாழத்த வேண்டும்.

பின்னர் அடுத்தக் கையில் செய்யவேண்டும். இது போல் மூன்று செட்கள் செய்தால் போதுமானது வாரத்தின் இரண்டு நாட்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். பைசெப் செய்து முடித்தவுடன் இதை செய்யலாம். முதலில் கொஞ்சம் வலி இருக்கும் ஆனால் பயிற்சி பழகிவிட்டால் போதும் நண்பர்கள் தோளை விட்டு கையை எடுக்க மாட்டார்கள். அப்பறம் என்ன இனிமேல் சைடு போஸ்தான் எங்கு சென்றாலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *