எலும்புகளுக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள் – உடற்பயிற்சி

பொதுவாக ஜிம்மில் கார்டியோ பயிற்சிகள் செய்யும் அனைவருக்கும் தரை பயிற்சிகள் எனும் ப்ளோர் பயிற்சிகள் செய்ய அதிகம் விரும்புவார்கள். அதற்கு காரணம் மனிதன் நடக்கும் போது நாம் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக நம் முதுகெலும்பை நேராக்கி நடக்கிறோம்.
அதன் காரணமாக நமது முதுகெலும்பு வயதாக வயதாக தேய்வு பெறுகின்றது. அதை சுற்றியுள்ள தசைகள் அதிக சோர்வடைகின்றது. இது குறிப்பாக பிரசவத்திற்கு பின்னும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் முதுகெலும்பு தேய்மானம், அதை சுற்றியுள்ள தசைகளில் வலி என அதிகம் அவதியுறுவர்..
அதிலும் ஜிம்மில் உள்ள டிரெட்மில், எலிப்டிகல்ஸ் போன்ற இயந்திரங்களில் நடக்கும் போது நமது முதுகெலும்பு இன்னும் அதிக பளுவுக்கு உள்ளாகின்றது. அதனால் இன்னும் அதிகமாக பிரச்சினைகளை சந்திக்க நேரும்.
இதை தவிர்க்க வேண்டுமானால் கண்டிப்பாக ப்ளோர் பயிற்சிகள் எனும் தரை பயிற்சிகளை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் அப்படி செய்ய இயலாதவர்கள் ஜிம்மில் சென்று கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருத்தலே நலம் …
ப்ளோர் பயிற்சிகளை தவிர்த்து கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு முதுகெலும்பிற்கு பிரச்சினையை உண்டு பண்ணாமல் இருத்தல் இன்னும் நல்லது ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *